கே.ஆர். ராமசாமியின் மனைவி மரணம்
தமிழ்த் திரையுலகின் முதுபெரும் நடிகர், நடிப்புத் திலகம் கே.ஆர். ராமசாமி ஆவார். இவர், பெரியார், அண்ணா ஆகியோரின் நண்பர். கலைவாணர் என்.எஸ்.கே. அவர்களின் சம்பந்தி. ‘ஓர் இரவு’, ‘வேலைக்காரி’, ‘செந்தாமரை’, ‘சொர்க்கவாசல்’, ‘பூம்பாவை’ போன்ற பல படங்களில் நடித்து, பல்வேறு பாராட்டுகளைப் பெற்றவர். தமிழ்த் திரையுலகில் முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்தவர்.
கே.ஆர். ராமசாமி அவர்களைத் தமிழ்த் திரையுலகம் ஏற்கெனவே இழந்துவிட்டது. அவரின் மனைவி கே.ஆர்.ஆர். கல்யாணி (தமிழ்நாடு அரசின் டாப்கோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர்), தற்போது, இயற்கை எய்தினார். அவரது வயது 82. அவர் தன் சுயசரிதையை எழுதிக்கொண்டிருந்த வேளையில், முடிவில்லாப் பயணத்தில் ஆழ்ந்துவிட்டார்.
அன்னாரின் இறுதி சடங்கு, 10.02.2011 அன்று பகல் 3 மணி அளவில் சென்னை-35, நந்தனம் விரிவாக்கம், 5ஆவது பிரதான சாலை, எண் 20/12 (பாஸ்டன் பள்ளி அருகில்) நடைபெற உள்ளது.
==============================
தகவல் – மக்கள் தொடர்பாளர் செல்வரகு
