ஊழல்ன்னா, அல்வா சாப்பிடற மாதிரி

0
சிரிப்பானந்தா

Sirippanandha
“நான் சொல்லும் சிரிப்புகளில் எனது சொந்த நகைச்சுவை எது , காப்பியடித்த நகைச்சுவை எது என்று எப்படிக் கண்டுபிடிப்பீர்கள்?”, என்று நமது நகைச்சுவை சங்க உறுப்பினர்களிடம் கேட்டேன். “கொஞ்சமாவது சிரிப்பு வந்தால் அது காப்பியடித்தது என்று கண்டுகொள்வோம்”, என்றார்கள்! கீழே உள்ள ஜோக்(?!)குகள் என் சொந்த சரக்கு. ஏற்கெனவே யாராவது எழுதியிருந்தால் அவர்களதுதான் என்று உடனே ஒத்துக்கொண்டுவிடுவேன்.
======================
1.”ஊழல்ன்னா நம்ம தலைவருக்கு அல்வா சாப்பிடற மாதிரின்னு எப்படிச் சொல்றீங்க?”

“தொண்டர்களுக்கு அல்வா வாங்கிய வகையில் ஆன செலவு ரூபாய் ஒரு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடின்னு கட்சிக் கணக்கு காட்டியிருக்காரே!”
======================

2. ‘அந்தப் பல் டாக்டருக்கிட்டே யாரு போனாலும் இருபது பல்லும் ஆடுதுன்னு புடுங்கி உட்டுடுவாராமே?”

” ஆமா நான் தான் முன்னமே சொன்னேனே அவர் ஒரு தீவிர 20-20 கிரிக்கெட் ரசிகர்ன்னு”
======================

3. “நம்ம தலைவர் ஊழலுக்கு பெயர் போனவர்ன்னு சொன்னதை நம்பலையே இப்ப பார்த்தீங்கள?”

“ஏன் என்ன ஆச்சு?”

“அவரோட பேரக் குழந்தைக்கு ‘சவான் கல்மாடி ராசா’ன்னு பேர் வைச்சிருக்கார்”.
========================

4. “இருந்தாலும் நம்ம பிளேடு பக்கிரிக்கு இவ்வளவு குசும்பு கூடாது”

“ஏன்?”

” இனிமே திருட்டுக் கொடுக்கக் கூடாதுங்க்கிற ஜாக்கிரதை உணர்ச்சியை ஏழைகளையும் சென்றடைய வைத்த என்னைக் கைது செய்யச் சொல்வது எந்த விதத்தில் நியாயம்ன்னு அறிக்கை வெளியிட்டிருக்கான்!”
========================

5. “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிங்களப் படையை எதிர்கொள்ள, ஒவ்வொரு மீனவருக்கும் இலவசமாக இரண்டு மிஸைல் வழங்குவோம் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்!”
========================

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *