ஜெ.ராஜ்குமார்

எங்கோ ஓடுகிறேன்…
எதையோ பார்க்கிறேன்…
என்னமோ செய்கிறேன்…!
ஏற்றம் வருமென
கனவில் நினைக்கிறேன்..!

பழகும் மனிதரெல்லாம்
புதிதாய் இருந்தாலும்…
பழகிய மனிதரைபோல்
பழக்கம் வரவில்லை..!
பாழ்மனம் ஏனோ
அமைதி பெறவில்லை…!

படித்ததையெல்லாம்
பார்த்ததையெல்லாம்
ஏட்டில் வடித்தேன்…!
ஒரு பாமரன் போலே
அதை ரசித்தேன்…!

எந்த பாமரனும் வாசிக்கவே
இன்னும் எழுதுகிறேன்
எழுத்தாளனாய் நூறு நூல்களைத் தாண்டி…!

படத்திற்கு நன்றி
http://human-3d.com/3d-picture/3d-person—puppet-carrying-a-pile-of-books-000012166739

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க