பரீக்ஷா வழங்கும் இரண்டு நாடகங்கள்
நாடகத் தலைப்புகள்:
- பல்லக்கு தூக்கிகள்
- நாங்கள்
இயக்கம்: ஞாநி
நாள் – நேரம்:
2011 பிப்ரவரி 26 சனி, பிப்ரவரி 27 ஞாயிறு
இரு நாட்களிலும் மாலை 6.30 மணிக்கு.
இடம்: ஸ்பேசஸ், 1, எலியட்ஸ் பீச் சாலை, பெசண்ட் நகர் சென்னை 90
பல்லக்கு தூக்கிகள்:
சுந்தர ராமசாமி எழுதிய சிறுகதைக்கு நாடகாசிரியர் அ.ராமசாமி அளித்துள்ள நாடக வடிவம், இது. ஆள்வோர் ஆளப்படுவோர் பற்றிய நாடகம். 20 நிமிடங்கள்.
நாங்கள்:
தனி நபர் நடிப்பு வடிவத்தில் உள்ள பல சிறு நாடகங்களின் தொகுப்பு நாடகம், இது. ‘நான் நீ, நாம்’ என்ற சூழலைக் கருப்பொருளாகக் கொண்டுள்ள இந்த நாடகங்களில் ஒவ்வொரு பாத்திரமும் தன் கதையைச் சொல்கிறது. ஒவ்வொரு கதையும் பரிச்சயமானதுதான் ஆனால் அதிர்ச்சியானது. நம் குடும்பம் சார்ந்த கதைகள். இந்தியச் சூழலில் புனிதமாகவும் நம்மைத் தொடர்ந்து வாழவைக்கும் வடிவமாகவும் கருதப்படும் குடும்ப அமைப்பின் சமூக அமைப்பின் அழகும் அழுக்கும் வெளிப்படும் கதைகள். ஆறு கதைகளை ஞாநியும் இரண்டை ’மா’வும் எழுதியுள்ளனர். 110 நிமிடங்கள்.
பரீக்ஷா:
1978இல் ஞாநியால் தொடங்கப்பட்ட பரீக்ஷா, கடந்த 33 வருடங்களில் தமிழில் நடத்தியுள்ள நாடகங்களை எழுதியவர்கள்: இந்திரா பார்த்தசாரதி, ந.முத்துசாமி, அம்பை, ஜெயந்தன், அறந்தை நாராயணன், பிரபஞ்சன், எஸ். எம். ஏ. ராம், ஞாநி, பாதல் சர்க்கார், விஜய் டெண்டுல்கர், மகாஸ்வேதா தேவி, பெர்டோல்ட் பிரெக்ட், ஹெரால்ட் பிண்ட்டர், ஜே. பி. பிரீஸ்ட்லீ மற்றும் பலர். பல்வேறு வாழ்க்கை நிலைகளிலும் வெவ்வேறு பணிகளிலும் இருக்கும் பரீக்ஷா உறுப்பினர்களை இணைப்பது நாடகம் மீதும் சமூகம் மீதும் இருக்கும் அன்பேயாகும்.
தொடர்புக்கு: ஞாநி 9444024947
======================================
படத்திற்கு நன்றி: http://actorprithviraj.blogspot.com