காயத்ரி பாலசுப்ரமணியன்

மேஷம்: மாணவர்கள் தேவையற்ற எண்ணங்கள் மனதில் உருவாவதைத் தடுக்க தியானம் முதலிய பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. தொழிலில் பணவரவு சுமாராக இருந்தாலும், வியாபாரிகள் தங்கள் செல்வாக்கால் நல்ல பெயரைத் தக்க வைத்துக் கொள்வார்கள். உறவுகளின் தலையீட்டால், குடும்பத்தில் வேண்டாத குழப்பங்கள் உருவாகலாம். பெற்றோர்கள் பிள்ளைகளின் விருப்பத்தை அறிந்து உதவி வந்தால், அவர்களின் கல்வித்திறன் சிறப்பாக இருக்கும். வீடு, வாகனம் வாங்க விரும்புபவர்கள் நம்பிக்கையானவர்களை அணுகுதல் நல்லது.

ரிஷபம்: வியாபாரிகள் அதிகம் லாபம் பெற வேண்டும் என்பதற்காகக் குறுக்கு வழியை நாட வேண்டாம். விட்டுப் போன உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ள பெண்கள் எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலன் கிட்டும். வேலையில் இருப்பவர்களுக்குக் கடன் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என்றாலும், வீண் செலவுகளைத் தவிர்ப்பது அவசியம். நிலம், வீடு சம்பந்தப்பட்ட வகையில் வருகின்ற வருமானங்கள் குறைவாகவே இருக்கும். பெற்றோர்கள் குழந்தைகளின் பழக்க வழக்கங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சுய தொழில் புரிபவர்கள் நடப்பு நிலைக்கு ஏற்ற மாற்றங்களைத் தங்கள் தொழிலில் புகுத்தினால், நல்ல லாபம் பெறலாம்.

மிதுனம்: வேலையில் இருப்பவர்கள் தங்கள் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய வாரம். குடும்பத்தில் பெற்றோருக்காகச் சில மருத்துவச் செலவுகள் மற்றும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். பெண்கள் உறவினர்களிடம் பட்டும் படாமல் நடந்து கொண்டால் வீண் பிரச்னைகள் உருவாகாமலிருக்கும். வியாபாரிகளின் கூடுதல் உழைப்பால் ஏட்டளவில் இருந்த லாபம் கைக்குக் கிடைக்கப் பெறுவதோடு தொழில் மற்றும் வியாபார விரிவாக்க முயற்சிகளுக்கு வேண்டிய உதவிகளும் கிடைக்கும். பணவரவு குடும்பத்தின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவில் இருக்கும்.

கடகம்: தொழில் மற்றும் வியாபாரத்தில் போட்டிகள் அதிகம் இருப்பதால், வியாபாரிகள் எதிலும் அகலக் கால வைக்க வேண்டாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் திட்டங்களை நடைமுறைப்படுத்த புத்திசாலித்தனமாகச் செயல்படுவது அவசியம். சுய தொழில் புரிபவர்கள் நிர்வாக விவகாரங்களில் கவனமாகச் செயல்பட்டால், பணம் முடங்காமலிருக்கும். இந்த வாரம் கணவன் மனைவி இடையே சிறு சச்சரவு உருவாகலாம். கலைஞர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது சற்றே தாமதமாகலாம். வேலையில் இருப்பவர்கள் சுபநிகழ்ச்சிகளை நிறைவேற்ற கடன் வாங்க வேண்டியிருக்கும்.

சிம்மம்: நிதி நிலைமை கூடுவதால் கலைஞர்களின் வாழ்க்கைத் தரம் உயரும். கூடவே வீடு, வாகன வகையில் பராமரிப்புச் செலவும் கூடும். பணியாளர்களுக்குத் தேவையான சலுகைகள் கிடைப்பதால், மகிழ்ச்சியுடன் விளங்குவார்கள். குடும்பத்தேவையைப் பூர்த்தி செய்யும் அளவிற்குப் பெண்களுக்குக் கையில் பணப் புழக்கம் இருக்கும். மாணவர்கள் விரும்பிய ஆடை, ஆபரணங்களை வாங்கும் வாய்ப்பு வந்து சேரும். பொது வாழ்வில் இருப்பவர்கள் பேச்சிலும் செயலிலும் நிதானமாக இருப்பது வீண் தொல்லைகளைத் தவிர்த்து விடலாம். வேலையில் இருப்பவர்களின் வேலைப்பளு கூடும்.

கன்னி: பெண்கள் துணைவரின் கருத்துக்கு முக்கியத்துவம் தந்து செயல்பட்டால், குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். மாணவர்கள் பேச்சில் கவனமாக இல்லையென்றால் நண்பர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு. வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலையில் அமரும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரிகள் சுறுசுறுப்புடன் செயல்பட்டால் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறுவதோடு வேண்டிய லாபமும் கையில் வந்து சேரும். இந்த வாரம் பண வரவு அதிகமாக இருந்தாலும் கலைஞர்களுக்கு மன நிம்மதி என்பது சற்றுக் குறைவாகவே இருக்கும்.

துலாம்: வியாபாரிகள் புதிய சிந்தனைகளைச் செயல்படுத்தி செயல்பாடுகளில் வெற்றி காண்பார்கள். சுய தொழில் புரிபவர்கள் கடுமையான உழைப்பின் பேரிலேயே பணவரவை ஈட்ட முடியும். மாணவர்கள் தேவையில்லாமல் போட்டி மற்றும் பந்தயங்களில் ஈடுபட்டால் பணத்தை இழக்க நேரிடலாம். பணியில் அவ்வப்போது சில தடைகள் ஏற்பட்டாலும் கலைஞர்கள் மன திடத்துடன் செயல்பட்டால், நிலைமை ஓரளவு அனுகூலமாக மாறும். உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் முக்கியமான ஆவணங்களைப் பத்திரமாக வைப்பது அவசியம்.

விருச்சிகம்: வீண் செலவுகளைக் குறைத்தால், பெண்களுக்குக் குடும்ப செலவுக்குத் தேவையான பணம் கிடைக்கும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு எதிரிகள் சார்ந்த தொல்லை குறையும். இந்த வாரம் கலைஞர்கள் உற்சாகத்துடன் செயல்பட்டு அனைத்துப் பணிகளையும் வெற்றிகரமாக முடிப்பார்கள். பெற்றோர்களுக்குப் பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றி வைக்கும் வாய்ப்பு கிட்டும். வேலையில் இருப்பவர்கள் சில அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்ற கடன் வாங்கும் நிலை வரலாம். மாணவர்கள் நல்ல பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிப்பது அவசியம்.

தனுசு: பொது வாழ்வில் இருப்பவர்கள் பிறருக்கு வாக்குறுதி தரும் முன் யோசனை செய்வது நல்லது. தந்தால் அதைக் காப்பாற்ற இயலாமல் போகலாம். இந்த வாரம் வியாபாரிகளுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் அதற்கேற்ற பணவரவு இருக்கும். முதியவர்கள் தங்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்தினால் மருத்துவச் செலவுகள் குறையும். வேலையில் இருப்பவர்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட்டால் மட்டுமே தற்போது இருக்கிற அனுகூலத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். கலைஞர்களுக்கு ஆடம்பர செலவுகளால் பிரச்னை வர வாய்ப்புண்டு.

மகரம்: இந்த வாரம் பணியாளர்களுக்கு ஓரளவு சலுகை கிடைக்கும். தொழில் முன்னேற்றம் பெற தேடி வரும் வாய்ப்புகளைச் சுய தொழில் புரிபவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வது அவசியம். கலைஞர்கள் படும் பாடு அதிகமாக இருந்தாலும் பணவரவு என்பது குறைவாகவே இருக்கும். வெளி ஊர்களில் வேலை செய்பவர்கள் தங்கள் வாகனங்களைப் பாதுகாப்பாக வைப்பது முக்கியம். மாணவர்கள் நண்பர்கள் மீது இரக்கப்படுவதில் ஒரு வரையறை இன்றிச் செயல்பட்டால், உங்களுடைய பணம் கரைந்து போகலாம். வியாபாரிகள் பாடுபட்டுப் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.

கும்பம்: பெண்கள் எந்தச் செயலையும் முன் யோசனையுடன் செய்வது நன்மை தரும். இந்த வாரம் வியாபாரிகளுக்குப் பணவரவு குறையும் வாய்ப்பிருப்பதால், அத்தியாவசியச் செலவுகளை மட்டும் மேற்கொள்ளுதல் புத்திசாலித்தனம். பொது வாழ்வில் இருப்பவர்களின் நற்பெயருக்குச் சிலர் களங்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பர். எனவே எதிலும் கவனமாக இருப்பது அவசியம். கலைஞர்கள் தற்போதைய நிலையைப் பாதுகாத்துக் கொள்ளக் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் உடல்நலனில் அக்கறை காட்டினால், கல்வியைத் தடையின்றித் தொடரலாம்.

மீனம்: மாணவர்கள் மனதினை ஒரு நிலைப்படுத்திச் செயல்பட்டால், வாழ்க்கையில் உயரலாம். முடங்கிக் கிடந்த பாக்கிகளை வசூல் செய்ய வியாபாரிகள் எடுக்கும் முயற்சிக்கு ஓரளவு பலன் கிடைக்கும். இந்த வாரம் பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு வழக்கு மற்றும் கோர்ட் வகையில் செலவுகளும், கவலைகளும் அதிகரிக்கலாம். வேலையில் இருப்பவர்களுக்குச் சில மாற்றங்கள் தொல்லைகளைத் தந்தாலும், அவற்றின் மூலம் உங்கள் திறமைகள் வெளிப்படும். குடும்பத்தில் அவ்வப்போது சில பிரச்னைகள் வந்து கொண்டிருக்கும். பெண்கள் எதையும் பெரிதுபடுத்திக் கொள்ளாமல் இருப்பது புத்திசாலித்தனம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *