அடையாறு புற்றுநோய் மருத்துவ மனைக்கு ரூ. 6 லட்சம் நன்கொடை
சென்னை, அடையாற்றில் உள்ள புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவமனைக்கு ரவுன்ட் டேபிள் இந்தியா அமைப்பு சார்பில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ரூ 6 லட்சம் நன்கொடை வழங்கினார்.
ரவுண்ட் டேபிள் இந்தியா, 18 வயது முதல் 40 வயதுள்ள இளைஞர்களுக்கான, அரசியல் சாராத பொதுநல அமைப்பு. தேசிய, சர்வதேச விவகாரங்களில் சேவை, நல்லெண்ணம் ஆகியவற்றை ஊக்குவிப்பதே இந்த இளைஞர்களின் நோக்கமாகும். இந்த அமைப்பின் சென்னை காஸ்மாபாலிட்டன் ரவுண்ட் டேபிள் 94 கிளை சார்பில் 2010 அக்டோபர் மாதம் சூப்பர் கார் நிகழ்ச்சி நடத்தப்பட்டு, நிதி திரட்டப்பட்டது.
இந்த நிதியிலிருந்து ரூ 6 லட்சத்தை மறைந்த இசையமைப்பாளர் மகேஷ் நினைவாக உருவாக்கப்பட்ட மகேஷ் நினைவு அறக்கட்டளைக்கு நன்கொடையாக அளித்தனர். இந்த நிதிக்கான காசோலையை பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கினார்.
அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்குத் தேவையான நவீன சிகிச்சை உபகரணங்களை வாங்க, இந்த நிதி பயன்படுத்தப்படும்.
==================================
தகவல்: மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன்