தியேட்டர் லாப் வழங்கும் இரு நாடகங்கள்
2011 மார்ச்சு 6ஆம் தேதியன்று தியேட்டர் லாப் என்ற நாடக அமைப்பு, இரண்டு நாடகங்களை அரங்கேற்றுகிறது.
பம்மல் சம்பந்த முதலியாரின் ‘சங்கீதப் பைத்தியம்’, வைக்கம் முகம்மது பஷீரின் ‘சப்தங்கள்’ ஆகிய நாடகங்களை இங்கு காணலாம்.
சென்னை நுங்கம்பாக்கத்தில், கல்லூரிச் சாலையிலிருக்கும் அலியான்ஸ் ஃப்ரான்ஸேஸ் அரங்கில் இவை நிகழ்கின்றன. இவ்விரு நாடகங்களும் முற்பகல் 10 மணியளவில் ஒரு முறையும் மாலை 4 மணியளவில் ஒருமுறையும் அரங்கேறவிருக்கின்றன.
வைக்கம் முகம்மது பஷீரின் ‘சப்தங்கள்’ நாடகத்தில் பாரதி மணி, வைக்கம் பஷீராக நடிக்கிறார்.
இந்த நிகழ்வின் அழைப்பிதழ் இங்கே: