காரைக்குடியில் கம்பன் திருநாள்‘ 2011
‘கம்பன் புகழ் பாடிக் கன்னித் தமிழ் வளர்ப்போம்’ என்ற முழக்கத்துடன் தொடர்ந்து காரைக்குடியில் தொடர்ந்து எழுபத்து இரண்டு ஆண்டுகளாக இயங்கி வரும் கம்பன் கழகத்தின் இந்த ஆண்டின் விழா, 2011 மார்ச் மாதம் 17 முதல் தொடங்கி நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் தமிழக அறிஞர் பெருமக்கள் பலர் கலந்துகொள்கின்றனர்.
நிகழ்ச்சி விபரம் வருமாறு:
================================
17.03.2011 – கம்பன் மணி மண்டபம்
காரைக்குடி
மாலை 5.30 மணி
தலைவர் சிவ. சத்தியமூர்த்தி
வரவேற்புரை – கம்பன் அடிசூடி
தொடக்கவுரை – உயர் நீதி மன்ற வழக்கறிஞர் த. இராமலிங்கம் அவர்கள்
அறக்கட்டளை பொழிவுரை – ச. சிவகாமி – கம்பன் காட்டும் உறவும் நட்பும்
திருமிகு எஸ். என் குப்புசாமி, நா நஞ்சுண்டன் ஆகியோருக்குக் கம்பன் சீர் பரவியப் பெருமை கருதி பாராட்டப் பெறுகிறது. பாராட்டினைச் செய்பவர் பேராசிரியர் புனிதா ஏகாம்பரம்
கம்பனில் திருமுறைகள் என்ற நூலும் இவ்விழாவில் வெளியிடப்பெறுகிறது. இந்நூலை எழுதியவர், பேராசிரியர் சபா. அருணாசலம் ஆவார்.
================================
18.3.2011 – கம்பன் மணி மண்டபம்
காரைக்குடி
மாலை 5.30 மணி
இவ்விழா தனித்த சிறப்புடையது. அகவிழி (புறவிழிக் குறைவினை அகவிழியால் மாற்றுத் திறனாக்கிக் கொண்டவர்கள்) அறிஞர்கள் அரங்கமாக இது புதுமைபட மிளிர்கிறது. இப்படி ஒரு அரங்கம் தமிழகத்திற்கே புதுமை. முதன்மை. இவ்வரங்கின் தலைமை சென்னை நந்தனம் கல்லூரிப் பேராசிரியர் திரு. ந. சேசாத்திரி அவர்கள்
இவரின் கீழ் கம்பனில் பாத்திரமும், பாத்திறமும் ஓங்கி நிற்பது என்ற பொதுத் தலைப்பில் திரு. மா. உத்திராபதி சுமித்திரையே என்றும், திரு ஆ. நாராணசாமி விசுவாமித்திரரே என்றும் திரு. எம் துரை அவர்கள் குகனிலே என்றும் திரு. கு. கோபாலன் அவர்கள் வீடணனிலே என்றும் திருமதி சே. அன்னப் பூரணி அவர்கள் மண்டோதரியிலே என்றும் வாதிட உள்ளனர்.
================================
19.3.2001 – கம்பன் மணி மண்டபம்
காரைக்குடி
மாலை 5.30 மணி
பட்டி மண்டபம்
நடுவர் கலைமாமணி சோ. சத்தியசீலன் அவர்கள்
பொருள்: பாத்திரப் படைப்பில் கம்பனைப் பாடாய்ப் படுத்திய பாத்திரம்
கைகேயியே
திருவாளர்கள் த. இராஜாராம், செல்வி ம. சர்மிளா தேவி, மு. பழனியப்பன், கே. கண்ணாத்தாள்
வாலியே
திருவாளர்கள் அ. அறிவொளி. வீ. பிரபா, இரா. மாது, திருமதி ரேவதி சுப்பிரமணியன்
கும்பகருணனே
திருவாளர்கள் வே. சங்கரநாராயணன், செல்வி எஸ்.விஜி, இரா. இராமசாமி, சுமதிஸ்ரீ
என்ற நிலையில் பட்டி மண்டபம் நடைபெற உள்ளது.
================================
20.3.2011 – நாட்டரசன் கோட்டை
கம்பன் அருட்கோயில்
மாலை 5.30 மணி
தலைப்பு: பாத்திறமலி பாட்டரசன்
தலைவர்: தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள்
வரவேற்புரை: கண. சுந்தர்
நயம்மலி நாடக அணி – திரு. அ. அ ஞான சுந்தரத்தரசு
கலைமலி கற்பனை – திரு. சொ. சேதுபதி
இனிமைமலி சொல்லாட்சி – திரு. மா. சிதம்பரம்
இறைமலி ஈற்றடி – செல்வி இரா. மணிமேகலை
நன்றியுரை திரு. நா. மெய்யப்பன்
================================
அனைவரும் வருக! கம்பன் புகழ் பாடிக் கன்னித் தமிழ் வளர்ப்போம்!!
—————————————————
தகவல் – மு.பழனியப்பன்