மோகன் குமார்

கேள்வி:  சுந்தர்ராஜன், சீர்காழி

புறம்போக்கு நிலத்தில் 5 ஆண்டுகளாகக் குடியிருப்போருக்கு அந்த நிலம் அரசுக்குத் தேவையில்லை என்றால், அவர்களுக்கே சொந்தமாக அளிக்கப்படும் என முந்தைய தி.மு.க. ஆட்சியில் அறிவித்தார்கள். இந்த அறிவிப்பு, புறம்போக்கு நிலத்தில் குடியேறுவதற்கு மக்களை ஊக்குவித்தது போல் ஆகாதா? இதன் மூலம் அரசின் சொத்துகள், அதிகமாக ஆக்கிரமிக்கப்படும் அல்லவா? இந்த அறிவிப்பு, சட்டப்படி சரியானதுதானா?

 

பதில் :

புறம்போக்கு நிலங்களில் பல வகை உண்டு. அதில் வீடுகள் கட்டக் கூடிய இடம் என்கிற வகையில் வந்தால், அந்த புறம்போக்கில் ஒருவர் ஐந்து வருடம் இருந்தால் மட்டுமே, நீங்கள் சொன்னது போல்  கேட்க முடியும்.

அரசுக்கு எந்த பயன்பாடும் இல்லாமல் இருக்கும் நிலங்களை அரசாங்கமே “கிராமத்து புறம்போக்கு” என்று அறிவிக்கிறது. அத்தகைய இடங்களில் இருப்போருக்கு அந்த நிலத்தை  அளிக்கிறது. அந்த இடத்தில் குறிப்பிட்ட நபர் நெடுங்காலமாய் இருந்ததை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். அப்போது தான் அவருக்கு இடம் கிடைக்கும். 

இது போன்ற அறிவிப்புகள் காலம் காலமாக ஒவ்வொரு அரசாங்கத்தாலும் அறிவிக்கப்படுகிறது. எனவே இதனை ஒரு வழக்காக எடுத்துச் சென்றால், கோர்ட் கூட இந்த அறிவிப்புகளை சட்டத்துக்கு புறம்பானது என சொல்லாது என்றே நினைக்கிறேன் 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.