ஆறுதலை அளிக்கும் ஆறு வகைச் சிரிப்பு

1

சிரிப்பானந்தா

Sirippanandha

சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கே
சொந்தமான கையிருப்பு – வேறு
ஜீவராசிகள் செய்ய முடியாத
செயலாகும் இந்தச் சிரிப்பு
இது அதிகாரிகளின் ஆணவச் சிரிப்பு
இது அடங்கி நடப்பவரின் அசட்டுச் சிரிப்பு
இது சதிகாரர்களின் சாகஸச் சிரிப்பு
இது சங்கீதச் சிரிப்பு
எனச் சிரிப்பைக் கலைவாணர் வகைப்படுத்தினார்.

புத்தரின் நேரடிச் சீடர் சாரிபுத்தா சிரிப்பை வகைப்படுத்தியுள்ளார் என்பது தெரியுமா?
சிரிப்பை அவர் 6 வகையாகச் சொல்கிறார்.

முதல் வகை- ஸிதா

முகபாவத்தின் அதிநுட்பங்களுடன் கட்டுப்பாடாய் வெளிப்படும் புன்னகை. இது நாமாக செய்யக்கூடியது அல்ல. புத்தரைப் போன்ற அதிநுட்ப உணர்வும் கவனமும் உடையவர்களுக்கே இது வாய்க்கும்.

இரண்டாவது வகை – ஹஸிதா

இது மெலிதான உதட்டசைவுடன், பற்களின் முனைப்பகுதிகள் வெளிப்படுமாறு அமைவது.

மூன்றாவது வகை – விஹஸிதா

சிறிதளவு சிரிப்புடன் கூடிய விரிந்த புன்னகை

நான்காவது வகை – உபஹஸிதா

உரத்த ஒலியளவுடன் கூடிய அழுத்தமான சிரிப்பு. தலை மற்றும் கையசைவுடன் இணைந்தது.

ஐந்தாவது வகை – அபஹஸிதா

கண்ணீரை வரவழைக்கக்கூடிய சிரிப்பு

ஆறாவது வகை – அதிஹஸிதா

ஒட்டுமொத்த உடம்பும் குலுங்கச்சிரிக்கிற மூர்க்கத்தனமான பெரும் கூச்சலுடன் கூடிய சிரிப்பு!

சிரிப்பு மாதிரி சின்ன விஷயங்கள்கூட கவனம் செலுத்தி நோக்கும்போது மிகப்பெரிய விஷயமாகிவிடுகிறது. அதுவே ஒட்டுமொத்த உலகமாகிவிடுவதும் உண்டு. தியானத்துடன் செய்யும்போது அது இறைவனாகவே மாறிவிடுகிறது.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “ஆறுதலை அளிக்கும் ஆறு வகைச் சிரிப்பு

  1. ஏழாவது வகை: அதீத ஹஸிதா: ‘ஓஹோஹோ’ ன்னு கும்பலே உரக்கச் சிரிப்பது. இதை ‘ஸ்னேகஹஸிதா’ என்றும் சொல்வார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.