தமிழ் ஸ்டுடியோ நடத்தும் 8 ஆவது குறுந்திரைப் பயணம் – புதுவை
நாள்: 30-06-2012, சனிக்கிழமை
நேரம்: மாலை 4 மணி
இடம்: OCEAN ACADEMY, No.2 ECR Main Road, ஜீவா ருக்மனி மஹால் எதிரில், அல்லது லதா Steel house(Near), லாஸ் பேட்டை.
சிறப்பு அழைப்பாளர்: எழுத்தாளர். கி. ராஜநாராயணன்.
வணக்கம் நண்பர்களே
தமிழ் ஸ்டுடியோவின் எட்டாவது குறுந்திரைப் பயணம் புதுவையில் எதிர்வரும் சனிக்கிழமை (30-06-2012) மாலை நான்கு மணியளவில் நடைபெற உள்ளது.
மாற்று ஊடகங்களுக்காக குறும்படங்களை முன்வைத்து தமிழ் ஸ்டுடியோ கடந்த நான்கு வருடங்களாக களப் பணியாற்றி வருகிறது. அதன் ஒரு பரிணாமமே இந்த குறுந்திரைப் பயணம். இதன் மூலம் மக்களுக்கு குறும்படங்கள் என்றால் என்ன என்கிற ஒரு புரிதலை ஏற்படுத்தி அதன் மூலம் அவர்களை மாற்று சினிமா குறித்து சிந்திக்க வைப்பது எளிது.
புதுவையில் லாஸ் பேட்டையில் உள்ள ஒசேன் பயிற்சி நிலையத்தில் இந்த திரையிடல் நடைபெறுகிறது. சுமார் இருபதிற்கும் மேற்பட்ட சிறந்த குறும்படங்கள் திரையிடப்படும் இந்த நிகழ்வை கரிசல் காட்டு எழுத்தாளர் கி. ராஜநாராயணன் தொடங்கி வைத்து பேசுகிறார்.
திரையிடல் முடிந்ததும் அருகில் உள்ள மீனவ கிராமத்தில் மீன் குழம்பு (பதிவு செய்யும் ஆர்வலருக்கு மட்டுமே) வைத்து இரவு விருந்தை முடித்துக் கொண்டு கடற்கரையிலேயே விடிய விடிய திரைப்படங்கள் பற்றி பேசிக்கொண்டிருந்துவிட்டு ஞாயிறு மாலை சென்னை திரும்புகிறோம். ஆர்வமுள்ளவர்கள் இதில் கலந்துக் கொள்ளலாம். தமிழ்நாட்டில் இருந்து வருபவர்கள் அவசியம் முன்பதிவு செய்து கொள்ளவும். இரவு எங்களோடு விவாதத்தில் கலந்துக் கொள்ள விரும்பும் புதுவை நண்பர்களுக்கும் முன்பதிவு அவசியம்.
ரசனையுள்ள நண்பர்கள் திரளாக வாருங்கள்… புதுவையில் சந்திப்போம்.
முன்பதிவு செய்ய: 9840698236