ஐரோப்பாவில் தமிழ்ப் பாட்டுத் திறன் போட்டி

0

வானம்பாடி-2011 என்ற தலைப்பில் ஐரோப்பாவில் நடைபெற உள்ள பாட்டுத் திறன் போட்டி குறித்த செய்திக் குறிப்பு வருமாறு:

பிரான்ஸ் தமிழர் இசைத் துறை ஸ்ருதிலயா முதல் முறையாக வானம்பாடி-2011 என்ற தலைப்பில் பாட்டுத் திறன் போட்டியை நடாத்துகிறது.  ஐரோப்பா எங்கும் உள்ள தமிழ்ப் பாடகர்களை ஒருங்கிணைத்து அவர்களில் சிறந்த பாடகர்களைத் தெரிவு செய்து கௌரவிக்கும் முகமாக, 2011 ஏப்பிரல் மாதம் தெரிவுப் போட்டியையும், மே மாதம் இறுதிப் போட்டியையும் நடாத்த உள்ளது.

•  இப் போட்டி வயதெல்லைகளை அடிப்படையாகக் கொண்டு கீழ்ப் பிரிவு, மத்திய பிரிவு, மேற்பிரிவு, அதிமேற்பிரிவு என நான்கு பிரிவுகளாக நடைபெறும்.

•  வெற்றி பெறும் கீழ்ப் பிரிவு, மத்திய பிரிவினர்க்கு ‘வானம்பாடி -2011” விருது வழங்கி மதிப்பளிக்கப்படும்.

•  மேற்பிரிவு, அதிமேற்பிரிவில் வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு ‘வானம்பாடி -2011” விருதும் முதல் மூன்று இடங்களுக்கும் முறையே 500€, 300€, 200€ என பணப் பரிசுகள் வழங்கப்படும்.

ஐரோப்பா வாழும் புதிய பாடகர்களின் ஆற்றல்களை வெளிக்கொணரும் நோக்கோடு பிரான்ஸ் தமிழர் இசைத் துறை ஸ்ருதிலயா நடாத்தப்பட உள்ள இப்போட்டியில் பாடும் ஆர்வம் உள்ள அனைவரையும் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

•  விண்ணப்ப முடிவுத் திகதி : 08.04.2011
•  தெரிவுப் போட்டி : 17.04.2011
•  இறுதிப் போட்டி : 29.05.2011

மேலதிக விபரங்களுக்கு:
Vaanampaadi
165 BD DE LA VILLETTE
75010 PARIS
Vanaam.paadi@gmail.com
0033658952898

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *