முகில் தினகரன்

ஏ…படைப்புக் கடவுளே! உன்
படைப்புத் தொழிற்சாலையின்
மூலப் பொருள் கலவையினை
கொஞ்சம் முனைப்புடனே பரிசீலி!

அன்புக் கலவையின் விகிதாச்சாரம்
அளவு குறைந்ததில் இங்கு
அரக்க குண மனிதர்களே
அதிகம் பிறக்கின்றனர்!

பண்புக் கலவையின் விகிதாச்சாரம்
பற்றாக்குறையானதில் இங்கு
பாவிகளின் எண்ணிக்கையே
பரவலாகி நிற்கின்றது!

அறிவுக் கலவையின் விகிதாச்சாரம்
அரைகுறையானதில் இங்கு
அறிவாளிகளின் அவதரிப்பு
அரிதாகவே போனது!

ஆசைக் கலவையின் விகிதம் மட்டும்
ஆளுமை கண்டதில் இங்கு
ஆஸ்தி விரும்பிகள் மட்டுமே
அதிகரித்துப் போயினர்!

எனவே

ஏ…படைப்புக் கடவுளே! உன்
படைப்புத் தொழிற்சாலையின்
மூலப் பொருள் கலவையினை
கொஞ்சம் முனைப்புடனே பரிசீலி!

படத்துக்கு நன்றி
http://us.fotolia.com/id/36652212

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படைப்பைப் பரிசீலி

  1. நல்ல கலவை(கவிதை)..
    நல்வாழ்த்துக்கள்…!

           -செண்பக ஜெகதீசன்…

Leave a Reply

Your email address will not be published.