உலக பாரம்பரியக் களம்
பவள சங்கரி
நறுக்.. துணுக்…(25)
World Heritage Site – உலகில் உள்ள அனைத்து முக்கியமான பாரம்பரியச் சின்னங்களும், அந்த குறிப்பிட்ட நாட்டிற்கு மட்டும் உடமையானது அல்ல. உலக மனித சமுதாயம் அனைத்திற்கும் பொதுவான ஒன்று என்று யுனெஸ்கோ நிறுவனம் அங்கீகரித்துள்ளது. 1972ம் ஆண்டு நவம்பர் 16ல் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் மார்ச் 2012 அறிக்கையின்படி இதுவரை 189 நாடுகள் கையெழுத்திட்டு ஏற்றுக்கொண்டுள்ளன. 2012 ஆம் ஆண்டு நிலவரப்படி இது வரை 962 களங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. 157 நாடுகளில் அமைந்துள்ள இக்களங்களில், 745 பண்பாட்டுக் களங்களும், 188 இயற்கைசார் களங்களும், 29 கலப்பு இயல்புக் களங்களும் அடங்குகின்றன. போர்க்காலங்களிலும் இந்தச் சின்னங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தக் கூடாது என்பது இதன் முக்கிய அம்சம என்பது குறிப்பிடத்தக்கது. பாரம்பரியத்துக்கு இன்றியமையாத இயற்கை மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பான களங்களைப் பட்டியலிட்டு, அவற்றைப் பாதுகாப்பதே இத்திட்டத்தின் முக்கியமன நோக்கமாம். 21 பிரதிநிதிகள் கொண்ட யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழுவினரால் நிர்வகிக்கப்படும் அனைத்துலக உலக பாரம்பரியங்கள் திட்டத்தின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள இத்திட்டத்தில் காடு, மலை, ஏரி, பாலைவனம், நகரங்கள், நினைவுச் சின்னங்கள், கட்டிடம், போன்ற அனைத்தும் அடங்கும்.
நம் இந்தியாவின் பாரம்பரியக் களங்கள்:
ஆக்ரா கோட்டை
அஜந்தா குகைகள்
எல்லோரா குகைகள்
தாஜ்மஹால்
மகாபலிபுரம் நினைவுச் சின்னங்கள்
கோனார்க் சூரியனார் கோவில்
காழிரங்க தேசியப் பூங்கா
கியோலாடியோ தேசியப் பூங்கா
மானஸ் வனவிலங்கு சரணாலயம்
கோவாவின் தேவாலயங்கள் மற்றும் கன்னிமாடங்கள்
பர்தேபூர் சிக்கிரி
ஹம்ப்பி நினைவுச் சின்னங்கள்
கஜீராஹோ நினைவுச் சின்னங்கள்
எலிபண்டா குடைவறை கோவில்கள்
12 சோழர் கால பெருங்கோவில்கள்
பட்டாடக்கல் நினைவுச் சின்னங்கள்
சுந்தரவன தேசியப் பூங்கா
நந்தா தேவி மற்றும் மலர்கள் தேசிய பூங்காக்கள்
சாஞ்சியின் புத்த நினைவுச்சின்னங்கள்
ஹூமாயூன் கல்லறை, தில்லி
குதுப் மினார் மற்றும் அதன் நினைவுச்சின்னங்கள், தில்லி
இந்தியாவின் மலை ரயில்
புத்தகயா மஹாபோதி கோயில் வளாகம்
பீம்பெட்கா குகைகள்
சம்ப்பனர் பாவகாத் தொல்பொருள் பூங்கா
சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் (விக்டோரியா டெர்மினஸ்)
செங்கோட்டை வளாகம்
ஜந்தர் மந்தர், ஜெய்ப்பூர்
மேற்கு தொடர்ச்சி மலைகள
படத்திற்கு நன்றி :
http://whc.unesco.org/en/list/
உலகின் மிகச்சிறந்த படைப்பான, மனிதன் இந்த பட்டியலில் சேருவது எப்போது?
தங்களுடைய கட்டுரைகளைப் படிக்கும் போதெல்லாம் ஆச்சரியம்தான் மேலிடுகிறது மேடம். நல்லதொரு செய்தியோ…தகவலோ…நாலு பேருக்குப் போய்ச் சேர வேண்டுமென்பதற்காக தாங்கள் மெனக்கெடுவது உண்மையிலேயே பாராட்டுக்குரிய விஷயம். இது வெறுமனே கூறப்படும் பாராட்டு வார்த்தைகளல்ல.
பாரம்பரிய இடங்களைப் பற்றிய நல்ல தகவல். நன்றிகள்
மேற்குத் தொடர்ச்சி மலைச் சென்ற மாதம் தான் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டது. ராஜஸ்தானின் மலைக் கோட்டைகளைப் பற்றி அப்போது விவாதிக்கப்பட்டது எனினும் அது சேர்க்கப்படவில்லை. வைப்புப் பட்டியலில் தான் இருக்கிறது. அடுத்த வருடம் இதையும் சேர்ப்பார்கள் என்று நம்புவோம்.
’பாரம்பரிய நகரங்கள்’ என்ற ஒரு பட்டியலும் உண்டு. இந்தியாவில் அலகாபாத் மட்டும் தான் இதில் இடம் பெற்றுள்ளது. தில்லியைச் சேர்க முயற்சிகள் நடைபெறுகின்றன. இதைப் பற்றி என் வலைப்பூவில் (http://kaialavuman.blogspot.in/2012/07/blog-post.html) எழுதியுள்ளேன். நேரம் இருந்தால் படிக்கவும்.
நன்றிகள்