வாழ்க இந்திய ஜனநாயகம்!
பவள சங்கரி
தலையங்கம்
நடக்கவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர், மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களும், மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அதாவது வழக்கம் போல இது ஆளுங்கட்சிக்கும், எதிர் கட்சிக்கும் நடக்கவிருக்கும் போட்டியாக மட்டுமே இருக்கும். இந்த உறுப்பினர்கள் அனைவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தானே என்ற கேள்வி எழுந்தாலும், ஆட்சிக்கு வந்தவுடன் அவர்கள் நல்லது மட்டுமே செய்வார்கள் என்ற நம்பிக்கை முழுமையாக இல்லாத நிலையிலும், ஆளுங்கட்சி மக்கள் விரோதப் போக்கை கடைபிடிப்பவர்களாக இருந்தாலும் குடியசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதிலும், அவர்களுடைய எதேச்சாதிகாரத்தைப் பயன்படுத்தி தங்களுக்குச் சாதகமாக இருப்பவர்களையே குடியரசுத் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெறுவதால், மக்களுக்கு நன்மை விளையப் போவதில்லை. அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பும் அவர்கள் முழுவதும் ஆளுங்கட்சியில் இருப்பவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப செய்ல்பட் வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிற இந்த போக்குதான் பல காலமாக நீடித்துக் கிடப்பதைக் காண முடிகிறது. எதிர் கட்சியிலிருந்து மிகச்சிறந்த வல்லுநர்களையும் அறிஞர்களையும் தேர்தலில் நிற்க வைத்தாலும், மக்கள் விரும்பினாலும் அவரைத் தெர்ந்தெடுக்க முடியாமல் இதனை வேதனையோடு கையைப் பிசைந்து கொண்டு நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது மட்டும்தான் சாத்தியமாகிறது
நாம் எதெற்கெடுத்தாலும் வெளிநாட்டுக்காரர்களை ஒப்பிட்டு நோக்குகிறோம்.. ஜப்பான் நாட்டவர் ஊழல் மிகுந்த அரசியல்வாதி என்றால் உடனடியாக வெளியேற்றி விடுவார்கள்..இதுவரை 4 பிரதமரை பதவி இறக்கம் செய்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கையும் எடுத்திருக்கிறார்கள். அமெரிக்காவிலோ மக்களுக்கு நன்மை செய்தால் மட்டுமே அங்கு அதிபராகும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.. மக்கள் முழுமையாக இவரால் நம் நாடு சுபிட்சம் பெறும் என்ற நம்பிக்கையுடன் ஒவ்வொருவரும் ஓட்டளித்து தேர்ந்தெடுப்பதால் மட்டுமே ஒருவர் அதிபர் ஆக முடியும்.
நம் நாட்டில் ஏன் அது போன்ற திட்டம் கொண்டுவரத தயங்க வேண்டும்.. சட்டத்தை ஏன் மாற்றியமைக்க எவரும் முயற்சி எடுக்கவில்லை. அப்படி ஒரு நிலை இருந்தால் இன்று அப்துல்கலாம் போன்ற மக்கள் மனதில் இடம் பிடித்த தலைவர்கள் குடியரசு தலைவராகக்கூடிய வாய்ப்புகள் பறி போகாமல் இருக்கும்…. மக்களுடைய விருப்பங்களுக்கும் மதிப்பளிப்பதாக நம்பிக்கை இருக்கும்.. வருகிற 19ம் தேதி நடைபெற்ப்போகும் குடியரசுத் தலைவர் தேர்தலும், இதற்கு விதிவிலக்கல்ல..
வாழ்க இந்திய ஜனநாயக்ம்
வளர்க சுதந்திரம்
வழக்கம் போல இது ஆளுங்கட்சிக்கும், எதிர் கட்சிக்கும் நடக்கவிருக்கும் போட்டியாக மட்டுமே இருக்கும் என்றாலும், இதில் போட்டி ஒன்றுமில்லை. எல்லாம் ஒரு சடங்கு. ஆணாதிக்கம் போன்ற மெஜாரிட்டியாதிக்கம். நாட்டின் நலன் ஒரு பொருட்டல்ல. டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு பிறகு, தகுதியுள்ள அதிபர் வந்தது இல்லை. ஜனாப் அப்துல் கலாம் கூட சில அகினிப்பரிக்ஷைகளில் தவறி விட்டார்.‘நாம் எதெற்கெடுத்தாலும் வெளிநாட்டுக்காரர்களை ஒப்பிட்டு நோக்குகிறோம்..’~ பின் யாருடன் ஒப்பிடவேண்டும்? என்ன பேச்சு இது, ஆசிரியரே?‘நம் நாட்டில் ஏன் அது போன்ற திட்டம் கொண்டுவர தயங்க வேண்டும்.?’~ யாரை கேட்கிறீர்கள்? திருமங்கலபாணி வாக்காளர்களையா?இன்னம்பூரான்