செழியன்

இறைவன்  படைப்பால்
இருபால்  உருவானது .
இருபால் ஈர்ப்பால்
காமத்துப்பால்  சுரந்து ,
இருபால்  இணைந்ததால் ….
கருவானது …உருவானது.
உருவானது  உலகிற்கு  வந்தபோது
ஊற்றடெடுத்தது …..தாய்ப்பால்
பெற்றடெடுத்தது
ஆண்பால்  எனில்
தாய்ப்பால் கொடுத்து  களிப்பாள்.
பெற்றடுத்தது …..
பெண்பால்  எனில்
வெறுப்பாள்…..அந்த  வெறுப்பால்
கள்ளிப்பால்  கொடுத்தே  கழிப்பாள்
இப்புவியில்  இருந்தே  அப்பூவை .
கணநேர  சுகத்திற்காக  கணவன்
உடன்  படுக்கையில் ஒரு
உடன்  படிக்கை  மனதில்  வேண்டும் .
கருத்தடை  கொள்ளவேண்டும் .
கருச்சிதைவோ
உருவு  கண்டு  சிதைப்பதோ  மனதில்
கொல்ல வேண்டும்.
ரோசா  தளிருக்கு
உரமிட்டு -உயிர்த்தண்ணீர்  விட்டு
வளர்ந்து  பூப்பதை
பார்த்து  மகிழ்கிறோம் .
உருவான  கரு  உதிரத்தால்
உடல் வளர்ந்து  உருபெற்று
பிறந்து வருவதற்கு
தாய்ப்பால்  கொடுத்து
தாலாட்டும்  வாய்ப்பு -பெருமை
தாய்குலத்திற்கு மட்டுமே .
அந்த பிஞ்சு …..பெண் என்பதால்
நஞ்சை  கொடுப்பது
நெஞ்சை  அடைக்குது.
உன் முகத்தையே
உற்று  நோக்கும்
அந்த  கள்ளமில்லா
பிஞ்சுக்கு
நஞ்சை  கொடுக்க
நெஞ்சம்  துணிந்தது  எப்படி.?
பூத்த  மலரையே
பார்த்து  ரசிக்கும்  மனமே
பிறந்த  மழலையை
பெண் என்பதால்
மடிய  வைப்பதை  எதில் சேர்த்தி ?
நீயல்லாம் …..
தாயே  அல்ல ..பேயே .

படத்துக்கு நன்றி

     

http://www.mentalhelp.net/poc/view_doc.php?type=doc&id=29427

 

1 thought on “தாய்ப்பால்

 1. இருபால் இணைப்பில் சுரந்த
  காமத்துப்பாலின் விளைவில்
  கள்ளிப்பால் கலந்திடும்
  கசப்பான உண்மை,
  கவிதையில் நன்று…!
         -செண்பக ஜெகதீசன்…

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க