செய்திகள்

ஹரிகுமாரின் சங்கராபுரம் படத்திற்குச் சிக்கல்

 

செல்வரகு

தூத்துக்குடி,மதுரை சம்பவம் படங்களில் நடித்த ஹீரோ ஹரிகுமார் நடிப்பில் உருவாகிவரும்  படம் சங்கராபுரம். இந்தப் படத்தினை பிரபல வில்லன் நடிகர் நம்பிராஜன் கதை-வசனம் எழுதி இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் மேலும் வளர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 
சங்கராபுரம் படத்தினை AMR  நிறுவனம் சார்பில்- ராஜேந்திரன் அண்ணாச்சியும் VSV  நிறுவனம் சார்பில்விஜய சுகுமாரும் இணைந்து சரி பாதி முதலீடு செய்து தயாரித்து வந்தார்கள். ராஜேந்திரன் அண்ணாச்சி ஈசா படத்தில் வில்லனாக நடித்து பெயர்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தனது சொந்த சம்பாத்தியத்தில் இருந்து 50 லட்சம் ரூபாய்க்கும் மேலாக முதலீடு செய்து படத்தினை சிறப்பான முறையில் தயாரித்து வந்திருக்கிறார்.  மற்றொரு பங்குதாரர் ஆன விஜய சுகுமார் தனது பங்கினைச் சரி வர முதலீடு செய்யாமலும் , நடிகர்- நடிகையர்களிடம் பணம் வாங்குவது உள்ளிட்ட செயல்களிலும், அதிகப்படியான செலவுக் கணக்குகளைக் காட்டியும் ஏமாற்றி வந்துள்ளார். விஜய சுகுமாரிடம் பணம் கொடுத்துப் பாதிக்கப்பட்டவர்கள் அலுவலத்திற்கு வந்து பணம் கேட்டுத் தொந்திரவு செய்திருக்கிறார்கள்.

இதனால் அதிர்ச்சிக்குள்ளான ராஜேந்திரன் அண்ணாச்சி படப்பிடிப்பு முடியும் தறுவாயில் இருந்த சங்கராபுரம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகளை நிறுத்திவிட்டார். மேலும் நியாயமான தீர்வு வரும் வரை சங்கராபுரம் படத்தயாரிப்பு வேலைகளில் ஈடுபடபோவதில்லை என்றும் முடிவு செய்திருக்கிறார். லேப் கடிதங்கள், ஒப்பந்தங்கள் ராஜேந்திரன் அண்ணாச்சியிடம் இருப்பதால் சங்கராபுரம் படத்தின் வேலைகள்  நின்று போயிருப்பது இதனால் சங்கராபுரம் படக்குழுவினர் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கின்றனர் மேலும் பிரச்சினைகளுக்குச் சுமூகமானத் தீர்வு ஏற்பட்டு நல்ல படமாக வளர்ந்திருக்கும் சங்கராபுரம் விரைவில் வெளிவர  வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

இந்தப்படத்தில் பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி முக்கியமான வேடத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க