ராஜிவ் காந்தி பொறியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா

0

Rajiv_college_convocation

திருப்பெரும்புதூரில் உள்ள ராஜிவ் காந்தி பொறியியல் கல்லூரியின் ஆறாவது பட்டமளிப்பு விழா, 2011 ஏப்ரல் 2ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற்றது.

கல்லூரிச் செயலர் ஜேக்கப் ஜார்ஜ், பட்டமளிப்பு விழாவினைத் தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் முனைவர் ஆரோக்கியராஜ் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரியின் தலைமைச் செயல் அலுவலர் ஜார்ஜ் ஜேக்கப், சிறப்பு விருந்தினரான அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் எஸ். கெளரி அவர்களை அறிமுகம் செய்துவைத்தார்.

முனைவர் எஸ். கெளரி, தம் பட்டமளிப்பு விழாப் பேருரையில், மாணவர்கள் தாம் பெற்ற கல்வியால் சமுதாயத்திற்குப் பயனுள்ள வகையில் பங்காற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.

கல்லூரித் தலைவர் ரெவரண்ட் டாக்டர் குரியன் தாமஸ், ஒவ்வொரு பிரிவிலும் முதலாவதாகத் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்க்கு ரூ. 2000 பரிசு வழங்கினார்.

======================
தகவல் : வைகைச்செல்வி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *