அம்பத்தூரில் துக்ளக் சத்யா பேசுகிறார்
அம்பத்தூரில் இயங்கிவரும் ரைட் சாய்ஸ் நகைச்சுவை சங்கத்தின் 2011 ஏப்ரல் மாதக் கூட்டத்தில் எழுத்தாளர் ‘துக்ளக்’ சத்யா பேசுகிறார். இது தொடர்பாக, அந்தச் சங்கத்தின் நிர்வாகி சிரிப்பானந்தா விடுத்துள்ள செய்தி:
இந்த மாதம் இரண்டு நகைச்சுவை விழாக்கள்! ஒன்று வழக்கம் போல நமது விழா! மற்றொன்று எந்த நகைச்சுவைச் சங்கமும் வழங்கமுடியாத எண்ணற்ற நகைச்சுவைக் காட்சிகள் நிறைந்த தமிழகத் தேர்தல் திருவிழா!
தேர்தலை முன்னிட்டு, தேர்தல் காமெடிகளை தனக்கே உரித்தான அரசியல் நையாண்டிகளுடன் விளகக (கலக்க) வருகிறார் பிரபல எழுத்தாளர் துக்ளக் சத்யா.
பிறகென்ன உங்கள் படைகளை ஒரு லாரியில் ஏற்றிக்கொண்டு அம்பத்தூர் நோக்கிப் புறப்படுங்கள்! (அழைப்பிதழ் இணைத்துள்ளேன்). லாரியில் கட்டுக் கட்டாகக் கொண்டுவந்தாலும் தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளாது (அட நான் சொன்னது ஜோக் கட்டுகளைத்தான்!) என உறுதி அளிக்கிறேன்.