பரிசு பெற்ற சிரிப்புத் தெறிப்புகள்

1

Humour_club_logo

அம்பத்தூரில் இயங்கிவரும் ரைட் சாய்ஸ் நகைச்சுவை சங்கத்தின் 2011 மார்ச்சு மாதக் கூட்டத்தில் மருத்துவர் சொக்கலிங்கம், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அந்த நிகழ்வில் பரிசு பெற்ற சிரிப்புத் தெறிப்புகள்.  ==================================================

முதல் பரிசு

“ஏன்டி, புதுப் புடைவை எடுத்திருக்கியே உன் வீட்டுக்காரருக்கு தெரியுமா?”

“அடிப் போடி, நான் புடவை எடுத்தது, அந்தக் கடைக்காரருக்கே தெரியாதே!”

சொன்னவர்: சி.சுப்பிரமணியன், விநாயகபுரம், அம்பத்தூர்.
==================================================

இரண்டாம் பரிசு

“அலோபதி தெரியும், அவர் என்ன ஹலோபதி டாக்டர்ன்னு போர்டு போட்டிருக்கார்?”

“அவர் கன்சல்டேஷன் முழுக்க போன்லயே முடிச்சிடுவாராம்”

சொன்னவர்: சாருலதா, பிரிதிவிபாக்கம், அம்பத்தூர்.
==================================================

மூன்றாம் பரிசு

“ஆகவே எங்கள் தலைவருக்குப் பாரத ரத்னா இல்லை என்றாலும் அட்லீஸ்ட் ஒரு தமிழக ரத்னா அவார்டாவது கொடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்”

சொன்னவர்: மீனாட்சி, கிருஷ்ணாபுரம், அம்பத்தூர்.
==================================================
தகவல் – சிரிப்பானந்தா

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பரிசு பெற்ற சிரிப்புத் தெறிப்புகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *