‘இதயம்’ தொலைக்காட்சித் தொடரில் அடுத்து….?

0

Idhayam_serial_scene

சன் தொலைக்காட்சியில் மாலை 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இதயம் மெகா தொடர்… பரபரப்பாக ஆரம்பமாகி, தொடர்ந்து விறுவிறுப்பு குறையாமல், தொய்வின்றி வளர்ந்து வருகிறது.

ஒரு கொடியவனால் அநீதி இழைக்கப்பட்ட தன் மருமகளுக்காகப் போராடும் பாசமிகு மாமியாராக டாக்டர் கல்யாணி கதாபாத்திரத்தில் சீதா நடித்திருக்கிறார். நந்தினியைக் கெடுத்தவனே அவள் கணவனுக்கு நண்பனாக, அதனால் குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்களும், பின்னர் அவன் கொலையான பிறகு அதற்குக் காரணம் யார்? என்ற சஸ்பென்ஸுடன் கதை மிகவும் சுவாரஸ்யமாகச் செல்கிறது.

கல்யாணி, தேவராஜன் மகளின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடக்கும் போது, பிரசாத் கொலை வழக்கு தொடர்பாக, கல்யாணி கைது செய்யப்படுகிறாள். பிரசாத்தைக் கொலை செய்யவில்லை எனக் கல்யாணி மறுக்க, சாட்சியங்கள் கல்யாணிக்கு எதிராக இருக்க, கல்யாணியின் நிலை என்னவாயிற்று..? கல்யாணி, பிரசாத்தைக் கொல்லவில்லை என்றால், அவனைக் கொன்றவர் யார் என்ற கேள்விகளை முன்வைத்துத் தொடர்கிறது……  இதயம்.

இத்தொடரில், சித்ரா லட்சுமணன், நித்யா தாஸ், நளினி, தேவதர்ஷினி ஆகியோர் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்தொடரை நித்தியானந்தம் இயக்கி வருகிறார்.

======================================
தகவல்: மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *