அருணிமா சின்ஹாவுக்கு அவலம்: அரசுக்கு மகளிர் ஆணையம் உத்தரவு

1

arunima sinha

பரேலியில் சென்றுகொண்டிருந்த ரயிலில் இருந்து வழிப்பறிக் கொள்ளையர்கள் சிலரால் தூக்கி வீசப்பட்ட தேசிய விளையாட்டு வீராங்கனை அருணிமா சின்ஹா, படுகாயம் அடைந்தார். இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்துத் தேசிய மகளிர் ஆணையம் அறிக்கை அளிக்குமாறு உத்தர பிரதேச அரசைக் கேட்டுக்கொண்டுள்ளது.

படுகாயம் அடைந்த வீராங்கனை சின்ஹாவிற்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்குமாறு தேசிய மகளிர் ஆணையத்தின் தற்போதைய தலைவராகச் செயல்படும் திருமதி யாஸ்மீன் அப்ரர், ரயில்வே மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர்களுக்கு ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் ரயில்வே துறையில் சின்ஹாவிற்கு வேலை வாய்ப்பு அளித்ததற்கும், இழப்பீடு மற்றும் மருத்துவச் செலவாக ரூ.2 லட்சம் வழங்கிய விளையாட்டுத் துறை அமைச்சகத்திற்கும் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் திருப்தி வெளியிட்டுள்ளார்.

==============================================
தகவல் – பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை

படத்திற்கு நன்றி: http://www.mangalorean.com

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “அருணிமா சின்ஹாவுக்கு அவலம்: அரசுக்கு மகளிர் ஆணையம் உத்தரவு

  1. It is very polite that the Railway Ministry has accepted to provide employment and compensation to Ms. Sinha. But what measures that Railways is going to take to stop any such future incidents?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *