தமிழ் இயக்குநர்கள் குழு, நார்வே பயணம்!

0

norway_tamil_film_festivalநார்வே தமிழ்த் திரைப்பட விழா’, 2011 ஏப்ர மாதம் 20 – 25ஆம் திகதி வரை ஓஸ்லோவில் நடைபெறுகிறது. இவ்விழாவின் போது 17 திரைப்படங்களும், 10 குறும்படங்கள் தமிழர் விருதுக்காகவும், பயிற்சி வகுப்புகளும், 8 குறும்படங்கள் திரையிடல் நிகழ்வு மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

சிறப்பு விருந்தினர்களாகப் பிரபல இயக்குநர், நடிகர் சேரன், பிரபல இசையமைப்பாளரும் ஏ.ஆர். ரகுமான் உறவினரும், இன்றைய இளைஞர்களின் இசையமைப்பாளருமான, G.V. பிரகாஷ் குமார், ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ புகழ் இயக்குநர் வெற்றிமாறன், அவருடன் ஆடுகளத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்து பலரது பாராட்டையும் பெற்றிருக்கும் ஒஸ்லோ கலைஞர் வ.ஐ.ச. ஜெயபாலன், ‘மதராசப்பட்டினம்’ புகழ் இயக்குநர் ஏ.எல் விஜய், ‘மொழி’, ‘அபியும் நானும்’, ‘பயணம்’ புகழ் இயக்குநர் ராதாமோகன், ‘மைனா’ புகழ் இயக்குநர் பிரபு சாலமன், ‘கூடல் நகர்’, ‘தென்மேற்குப் பருவக்காற்று’ புகழ் இயக்குநர் சீனு ராமசாமி, ‘களவாணி’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் நசிர், ‘தா’ திரைப்படத்தின் கதை நாயகன் ஹரிஷ், ‘தா’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் ராஜேஷ் மற்றும் பலர் கலந்து சிறப்பிக்கிறார்கள்.

மிகப் பெரிய அளவில் நடைபெறும் இத்திரைப்பட விழாவில் கலந்துகொள்ள இப்படியொரு இயக்குநர் பட்டாளம் கிளம்புவது இதுவே முதல் முறை. 2011 ஏப்ரல் 18 அன்று இரவு சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் சென்னை விமான நிலையத்திலிருந்து ஓஸ்லோவிற்குக் கிளம்புகின்றனர். ஆறு நாட்கள் நடைபெறும் திரைப்பட விழாக்களில் இக்கலைஞர்கள் பங்கு பெறுவதோடு ஆரோக்கியமான விவாதங்களிலும் கலந்துகொள்கிறார்கள்.

நோர்வே தமிழ்த் திரைப்பட விழா ஆரம்ப நாள் நிகழ்வுகள்
20.04.2011 Onsdag kl 17.00(Lørenskog Kino)

  • கலைஞர்கள் வரவேற்பு நிகழ்வு
  • பாட்டோடு நாங்கள்
  • இயக்குநர்கள் பங்குகொள்ளும் “நேர்முக நேரம்”
  • குறும்படங்கள் திரையிடல் (3 குறும்படங்கள்)
  • நடனங்கள்

நிறைவு நாள் நிகழ்வுகள்
25.04.2011 Mandag kl 17.00 (Lørenskog Kino)

  • பாட்‌டோடு நாங்கள்
  • நடனங்கள்
  • இயக்குநர்களின் விவாத மேடை
  • ‘தமிழர் விருது’ வழங்கும்  நிகழ்வு
  • ‘குறும்பட விருது’ வழங்கும் நிகழ்வு

திரைப்படக் கலை, புகைப்படக் கலை சம்பந்தமாகப் பயிற்சி நெறி வகுப்புகளும் நடைபெறுகின்றன. 22ஆம் தேதி வெள்ளிக் கிழமை, புகைப்படக் கலை, திரைப்படக் கலை  நுணுக்கங்கள், பயிற்சிப் பட்டறைகள், இயக்குநர் சேரன் மற்றும் ஏனைய இயக்குநர்கள் பங்களிப்போடு நடத்தப்படும்.

அவ்வமயம் புகைப்படப் போட்டியும் நடைபெற இருக்கிறது. தெரிவு செய்யப்படும் மூன்று புகைப்படங்களுக்கு நிறைவு நாள் நிகழ்ச்சியின்போது சான்றிதழும் பரிசும் வழங்கப்படும். படங்கள் பின்வரும் தலைப்புகளுக்கு உள்ளடங்கியதாக இருத்தல் வேண்டும்.

  • நார்வேயின் இயற்கையழகு
  • மனித உறவுகள்
  • உருவப் படம் – Portrait  (குழந்தைகள், மனிதர்கள், மிருகங்கள்)

மேலும் விவரங்களுக்கு –
Vaseeharan Sivalingam
NTFF Festival Director.
www.ntff.no
Lyricist/Producer/Distributor
www.vnmusicdreams.com

=================================

தகவல்: மக்கள் தொடர்பாளர் அ.ஜான்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.