இனி ஒரு பிறவி வேண்டாம்…!

 

 

பி.தமிழ் முகில் நீலமேகம்

 

செய்நன்றி தனை மறந்து

முகத்துக்கு முன் துதியும்

முதுகுக்குப் பின் மிதியடியும்

மலிந்து விட்ட சமூகத்தில் –

இனியும் வேண்டாம் ஒரு பிறவி !!!

 

பெயரளவில் பெண்ணுரிமை

என்றுரைத்து விட்டு

வழக்கமான கடிவாளங்களை

பொன்னால் பூட்டும் உலகில்

இனியும் ஒரு பிறவி – வேண்டவே வேண்டாம் !!!

 

உழைப்பவன் செவ்வனே உழைக்க

எவனோ ஒருவன் – அட்டையென

உழைப்பை உறியும் கேடு கெட்டோர் மத்தியில்

இனியும் வேண்டாம் –

ஐம்புலன் மூடி வாழும் ஓர் பிறவி !!!

 

யாமின்றி அணுவும் அசையாது

என்னால் ஆகிடாதது ஏதுமுண்டோ ? – என்று

எக்காளச் சிரிப்புதிர்க்கும் இலஞ்சக்

காட்டேரிகளின் மயான உலகில்

புல்லாய்க் கூட – வேண்டாம் ஓர் பிறவி !!!

 

படத்துக்கு நன்றி: http://www.mea.org/advertising/enoughads.html

About பி.தமிழ்முகில்

ஒரு முதுகலை பட்டதாரி.தற்சமயம் அமெரிக்காவில் வசிக்கும் இவருக்கு தமிழ் மொழியில் கதை,கவிதை,கட்டுரைகள் படிப்பதில், எழுதுவதில் ஆர்வம் அதிகம் உள்ளவர்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க