பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போரூர் கிளை சார்பாக ” தூய்மை நகரம்” என்ற இயக்கம் துவக்கப்பட்டுள்ளது.
- குடியிருப்பு பகுதிகளில் ‘தூய்மை குழுக்கள்’ உருவாக்கி செயல்பட வைப்பது.
- பிளாஸ்டிக்கின் விளைவுகள் பற்றி வலுவான விழிப்புணர்ச்சியினை உருவாக்கி, அதன் பயன்பாட்டினை குறைக்க செய்வது மாற்று வழிமுறைகளை
நடைமுறைப்படுத்த செய்வது.
- திடக்கழிவு மேலாண்மை, கழிவு நீர் வெளியேற்றம், கழிப்பிட மேலாண்மையில் கவனம் செலுத்துவது, குறுந்திட்டங்கள் உருவாக்கி, குடியிருப்பு பகுதி அளவில் செயல்படுத்துவது.
- பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் என பொது இடங்களில் தூய்மையினை படைப்பது.
- இன்றைய நகர சூழல் உருவாக்கும் நோய்கள் / அபாயங்கள் பற்றி மக்களை உணர வைப்பது. அதை எதிர் கொள்ளவும், தடுப்பு முறைகளை உருவாக்கவும் மக்களை பங்கேற்க வைப்பது.
- வீட்டுத் தோட்டம், நகரப் பூங்காக்கள், வீதியோர மரங்கள் – இவைகளில் மக்களின் கவனத்தினை ஈர்ப்பது போன்ற செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்தவே தூய்மை நகரம் துவக்கப்பட்டுள்ளது.
” தூய்மை நகரம்” மக்களிடம் அறிமுகப்படுத்த “பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி ” 06/01/2013 அன்று நடைப்பெற்றது.
இந்த பேரணியை சென்னை மாநகராட்சி 11வது மண்டல குழு தலைவர் திரு. K. சேகர் அவர்கள் மற்றும் 153வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி லதா குமார் அவர்கள் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், இணைத்தலைமை பொறியாளர் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
இந்த பேரணியில் போரூர் 153, 151 வட்டப் பகுதியில் உள்ள 23 குடியிருப்போர் நல சங்கங்களின் பொறுப்பாளர்களும் பகுதி வாழ் மக்களும் கலந்து கொண்டனர். அனைத்து வணிக சங்கங்கள் தென் சென்னை சிறுகுறுந்தொழில் முனைவோர் சங்கத்தினர் என பல தரப்பட்டனரும் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், வட சென்னை மற்றும் தென் சென்னை மாவட்ட பொறுப்பாளர்களும், காட்டராம்பாக்கம் ஊராட்சி நடுநிலைப்பள்ளி துளிர் இல்லக் குழந்தைகளும் கலந்து கொண்டனர். சுமார் 500க்கும் மேற்ப்பட்ட மக்கள் கலந்து கொண்ட இந்த பேரணி போரூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் துவங்கி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று சக்தி நகர் குடியிருப்போர் நலசங்க அலுவலகத்தில் நிறைவுற்றது. மதுரவாயில் சட்டமன்ற உறுப்பினர் திரு K. பீமாராவ் அவர்கள் பேரணியினை நிறைவு செய்து உரையாற்றினார்.
சக்தி நகர் குடியிருப்போர் நலசங்க வளாகத்தில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கண்காட்சியினை திரு. லட்சுமி நாராயணன் அவர்கள் துவக்கி வைத்தார். திரு. A. ரவீந்திரன், திரு. சக்திவேல், திரு. ரவிக்குமார், திரு. கலைச்செல்வன் இக்கண்காட்சியினை உருவாக்கினர்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் (TNSF) சேர்ந்த
திரு. கு. செந்தமிழ்ச்செல்வன், மாநிலத் தலைவர், TNSF,
திரு. உதயன், மாவட்ட துணைத்தலைர் , TNSF,
திரு ஜெகதீசன், மாவட்ட செயலாளர், தென் சென்னை , TNSF
போரூர் கிளைத் தலைவர் திரு. ரகுநாதன், , TNSF
போரூர் கிளை செயலாளர் திரு மாசிலாமணி, , TNSF
போரூர் கிளை பொருளாளர் திரு. செங்கன் , TNSF மற்றும்
நகரின் முக்கிய நபர்கள் பலரும் கலந்து செயல்பட்டனர்.
நன்றி,
கு.செந்தமிழ் செல்வன்
மாநில துணைத் தலைவர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.
9443032436