எஸ்.சி., எஸ்.டி மாணவர்களுக்கு 3 மாத இலவசக் கணினிப் பயிற்சி

0

மயிலாப்பூர் சாந்தோம் நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் பயிற்சி மையமான தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் மையத்தில் மூன்று மாத இலவசக் கணினிப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

எம் எஸ் ஆபிஸ் 2000 (MS WORD, MS EXCEL, MS POWER POINT & M S ACCESS) – ஆகிய மென்பொருள் பிரிவுகளில் இந்த இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது. எஸ் எஸ் எல் சி தேர்ச்சி பெற்ற மற்றும் அதற்கும் கூடுதலான தகுதியும், 30 வயதுக்கு உட்பட்ட எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் இந்தப் பயிற்சியில் சேர்ந்து பயனடையத் தகுதி உடையவர்கள் ஆவர்.

விருப்பம் உள்ள மாணவர்கள், எண். 56, சாந்தோம் நெடுஞ்சாலை, 3ஆவது மாடி, சென்னை – 4 என்ற முகவரியில் உள்ள (மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக வளாகம்) முகவரியில் உள்ள எஸ் சி, எஸ் டி பிரிவினருக்கான பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் மையத்தின் துணை மண்டல வேலை வாய்ப்பு அலுவலரை அனைத்து வேலை நாட்களிலும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்,

தொலைபேசி எண் – 91 – 044 – 24615112

======================================================
தகவல்: பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *