பொது

தொழிலாளர் மேலாண்மைப் படிப்புகள்

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் நடத்தப்பட்டு வரும் பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்டப் படிப்புகள் மற்றும் பிஜி.டி.எல்.ஏ. (தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை மாலை நேர பட்டயப் படிப்பு) ஆகியவைகளில் சேர்ந்து பயிலும் மாணவர்களுக்குத் தொழிலாளர் நல அலுவலர், பணியாளர் அலுவலர், மனிதவள அலுவலர் போன்ற பதவிகளுக்கு இந்தப் பட்ட / பட்டய படிப்புகள் பிரத்யேக கல்வித் தகுதியாகத் தொழிற்சாலைகள் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறையில் தொழிலாளர் அலுவலர் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வர் பதவிகளுக்கு இப்பட்ட / பட்டய படிப்புகள் முன்னுரிமைத் தகுதிகளாக நிர்ணயம் செய்து, அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

பட்டப் படிப்புகளுக்குப் பல்கலைக்கழக அங்கீகாரமும் பட்டயப் படிப்புக்கு தமிழக அரசின் அனுமதியும் உள்ளது.

விருப்பமுள்ள +2 முடித்த மாணவர்கள் பட்டப் படிப்பிற்கும், எதேனும் ஒரு பட்டம் பெற்ற மாணவர்கள் முதுநிலை பட்ட மற்றும் பட்டயப் படிப்பிற்கும் 31.5.2011 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இயக்குநர்,
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம்,
எண்.5 காமராசர் சாலை,
சென்னை – 5.
தொலைபேசி எண்.044 – 28440102 / 28445778.

======================================
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, தலைமைச் செயலகம், சென்னை.

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க