பிரகாஷ் எம். ஸ்வாமிக்கு நியூஜெர்சி சட்ட மன்றம் பாராட்டு
நியூஜெர்சி மாநிலச் சட்ட மன்றம், 2011 மே 9 அன்று, அமெரிக்காவின் பிரபல பத்திரிகையாளர் பிரகாஷ் எம். ஸ்வாமியை நேரில் வரவழைத்து அவரின் முப்பது ஆண்டுக் கால ஊடகச் சேவையைப் பாராட்டித் தீர்மானம் நிறைவேற்றியது.
இப்போது அமெரிக்கவில் ஆசிய மற்றும் பசிபிக் நாடுகள் தின விழா கொண்டாடப்படுகிறது அதன் அங்கமே இந்த அங்கீகாரம். சட்டசபை அவைத் தலைவர் திருமதி ஷீலா ஒலிவர் தீர்மானம் வசிக்க, அதை அவையின் துணைத் தலைவர் உபேந்திரா சிவுகுலா முன்மொழிந்தார்.
சென்னை, கிண்டி பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்ற சிவுகுலா, தற்போது அமெரிக்க அரசியலில் முக்கிய பங்கு வகிக்கிறார். மற்றும் அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் முக்கிய தலைவர். அவர், ஸ்வாமின் சிறப்புகளை எடுத்து உரைத்து, அவரைக் கவுரவித்தார். பிறகு அவை உறுப்பினர்கள் அனைவரும் கர ஒலி எழுப்ப, சிவுகுலா மற்றும் அரசு கொரடா ஜோசப் கரையன் பரிசளித்தார்கள்.
நியூ ஜெர்சி மாநில ஆளுநர் கிறிஸ் கிறிஸ்டி மற்றும் காங்கிரஸ் மகாசபை பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர், ஸ்வாமிக்குப் பாராட்டுத் தெரிவித்தனர். தமிழர் ஒருவர்க்கு இத்தகைய மரியாதை அளிக்கப்படுவது இதுவே முதல் முறை எனலாம்.
சென்னையில் ஹிந்து பத்திரிகை, இந்தியா டுடே வார பத்திரிகை மற்றும் ஜூனியர் விகடனில் நிர்வாக ஆசிரியராகப் பணியாற்றிய ஸ்வாமி, அமெரிக்கவில் வசிக்கிறார். நியூயார்க் தமிழ்ச் சங்கத் தலைவராகவும் செயல்படுகிறார்.
பிரகாஷ் எம். ஸ்வாமி உள்பட, ஊடகப் பிரிவைச் சேர்ந்த ஏழு பத்திரிகையாளர்கள், இந்த கவுரவத்தைப் பெற்றனர்.
=================================
படத்திற்கு நன்றி: http://www.aapiusa.org
பிரகாஷ் எம். ஸ்வாமி ‘பளிச்’ என்று எழுதுவார். தெளிவு, ஆதாரம், திண்ணமான முடிபுகள் இருக்கும். வாழ்த்துகள்.