அறுமுகநூறு (5)
அச்சமுற்ற நெஞ்சம் அரகரா என்றிடட்டும்,
அப்பனுற்ற பணிவைப் பணிவோடு கொண்டிடட்டும்,
அப்பழுக்கு அற்று அன்புமனம் அமைந்திடட்டும்,
அக்கினிக்கு ளுற்ற அறுமுகனைக் கொஞ்சிடட்டும்! 21
அச்சம் கொடுத்தான், அன்பைக் கொடுத்தான்,
அத்தன் படைத்த அறிவைக் கொடுத்தான்,
அல்லல் கொடுத்து, உள்ளத் தெளிவை,
அள்ளிக் கொடுத்து அகிலம் காத்தான்! 22
வடிவேலன் முகம்காணப் படியேறி வருவோம்,
நெடியேறும் சந்தனக் காவடிகள் சுமப்போம்,
கடிவாளம் இல்லாத மனதினைக் காக்க,
அடியேனுன் னடியினில் அடிமையாய் ஆவோம்! 23
கந்தவேள் கண்களைக் காணு மென்னம்,
வந்ததால் பூத்திடும் எண்ண மென்னும்,
சிந்தையைக் குன்றெனக் கண்டு கந்தன்,
வந்தமர்ந் தருளுவான் உள்ள மெங்கும்! 24
கந்தனைப் பாடிடும் சந்த மெல்லாம்,
வந்தெனைக் கூடிடும் சொந்த மென்று,
பந்தமும் பாசமும் மேவி நின்று,
விந்தைகள் செய்வது மாய மன்று! 25
படத்துக்கு நன்றி: http://www.kaumaram.com/pics/murugan_contents.jpg
chatchithanantham your poems (5 weeks) are really good i am eagerly wait for next weak GOD BLESS YOU
சந்தத் தமிழில் சுந்தர வடிவேலனைப் பாடும் தொடர், கந்தவேளின் அந்தமில்லா அருள் தந்து மகிழ்விக்கிறது. தொடர்ந்து படிக்கக் காத்திருக்கிறேன். மிக்க நன்றி.
தொடர்ந்து கருத்துக்களைத் தெரிவித்து வரும் பார்வதி ராமச்சந்திரன் அவர்களுக்கும், வாழ்த்துக்களைத் தெரிவித்த சகோதரி கீதா அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்