அதிமுக அணி அபார வெற்றி – ஜெ.ஜெயலலிதா, புதிய முதல்வர்

2

jayalalitha2011 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அணி, பெரும்பான்மை இடங்களில்  அபார வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் இந்த அணி 204 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. திமுக அணி 30 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. திமுக ஆட்சியில் அங்கம் வகித்த அமைச்சர்கள் பலரும் தோல்வியைத் தழுவியுள்ளனர்.

சட்டசபைத் தேர்தலில் திமுக படு தோல்வியைச் சந்தித்துள்ளதைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதி, தனது பதவியிலிருந்து விலகினார். தனது மற்றும் அமைச்சரவையின் விலகல் கடிதத்தை ஆளுநர் பர்னாலாவை நேரில் சந்தித்து அவர் வழங்கினார். எனினும் அடுத்த ஆட்சி அமையும் வரை அவர் தொடர்ந்து பொறுப்பில் இருப்பார்.

மாபெரும் வெற்றியைப் பெற்ற அதிமுக, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. மே 16 அன்று செல்வி ஜெ.ஜெயலலிதா, புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார்.

  • விலைவாசி உயர்வு
  • மின் வெட்டு
  • சட்டம் – ஒழுங்கு
  • ஊழல்
  • தண்ணீர்த் தட்டுப்பாடு
  • அரசின் கடன் சுமை
  • இலவசத் திட்டங்களுக்கான நிதி…..

உள்ளிட்ட பல சிக்கல்கள், புதிய ஆட்சியின் முன் உள்ளன.

இவற்றைத் திறமுடன் எதிர்கொண்டு, நல்லாட்சியை வழங்குவதே புதிய முதல்வர் ஜெயலலிதா முன் உள்ள பிரதான சவால் ஆகும். அவர், இவற்றை எப்படிச் சமாளிக்கிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

வெற்றி பெற்ற அனைவருக்கும் வல்லமை சார்பில் வாழ்த்துகள்.

=====================================

படத்திற்கு நன்றி – http://www.newsreporter.in

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “அதிமுக அணி அபார வெற்றி – ஜெ.ஜெயலலிதா, புதிய முதல்வர்

  1. மே மாதம் 16ஆம் தேதி பதவியேற்கவிருக்கும் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள்

    தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும் தருமம். மறுபடி வெல்லும் என்பதை மெய்ப்பித்த செல்வி ஜெயலலிதாவுக்கு
    ஸ்வாகதம்.

    அன்புடன்
    தமிழ்த்தேனீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *