ஜெயலலிதா, தமிழக முதல்வர் ஆனார்; 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றனர்

0

தமிழகத்தின் முதல்வராக மூன்றாவது முறையாகச் செல்வி ஜெ.ஜெயலலிதா பொறுப்பேற்றார். அவருடன் 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் 2011 மே 16 அன்று நண்பகல் இதற்கான விழா நடைபெற்றது.

2011 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 147 இடங்களை அதிமுக கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து, அதிமுக சட்டசபை கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதை அடுத்து, ஆளுநர் பர்னாலாவைச் சந்தித்து, ஜெயலலிதா ஆட்சியமைக்க உரிமை கோரினார். கடிதத்தை ஏற்றுக்கொண்ட பர்னாலா ஆட்சியமைக்குமாறு ஜெயலலிதாவைக் கேட்டுக்கொண்டார். ஆளுநரைச் சந்தித்தபோது அமைச்சரவைப் பட்டியலையும் ஜெயலலிதா வழங்கினார். அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.

TN governor & CM

இதையடுத்து 2011 மே 16 அன்று பதவியேற்பு விழா நடைபெற்றது. பகல் 12.45 மணியளவில் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். ஜெயலலிதாவுக்கு பர்னாலா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். தமிழில், கடவுளின் பெயரால் ஜெயலலிதா பதவியேற்றுக் கொண்டார்.

அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் பொறுப்பேற்றனர்.

  • நிதியமைச்சர் – ஓ.பன்னீர்செல்வம்,
  • வேளாண்மைத் துறை அமைச்சர் – கே.ஏ.செங்கோட்டையன்,
  • மின்துறை அமைச்சர் நத்தம் – ஆர்.விஸ்வநாதன்,
  • உள்ளாட்சித் துறை அமைச்சர் – கே.பி.முனுசாமி,
  • தொழில்துறை அமைச்சர் – சி.சண்முகவேலு,
  • வீட்டு வசதித் துறை அமைச்சர் – ஆர்.வைத்திலிங்கம்,
  • உணவுத் துறை அமைச்சர் – அக்ரி கிருஷ்ணமூர்த்தி
  • வணிக வரித் துறை அமைச்சர் – கோகுல இந்திரா,
  • சமூக நலத்துறை அமைச்சர் – செல்வி ராமஜெயம்,
  • கைத்தறி – ஜவுளித் துறை அமைச்சர் – பி.வி.ரமணா,
  • தகவல் தொழில்நுட்ப அமைச்சர் – ஆர்.பி.உதயகுமார்,
  • கால்நடைத் துறை அமைச்சர் – கருப்பசாமி
  • உயர் கல்வித்துறை அமைச்சர் – பி.பழனியப்பன்,
  • பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் – சி.வி.சண்முகம்,
  • கூட்டுறவுத் துறை அமைச்சர் – செல்லூர் ராஜூ,
  • வனத்துறை அமைச்சர் – கே.டி.பச்சமால்,
  • நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் – எடப்பாடி பழனிச்சாமி,
  • இந்து அறநிலையத் துறை அமைச்சர் – எஸ்.வி.சண்முகநாதன்,
  • பொதுப்பணித்துறை அமைச்சர் – கே.வி. ராமலிங்கம்
  • ஆதி திராவிட நலத் துறை அமைச்சர் – என்.சுப்பிரமணியன்,
  • போக்குவரத்து அமைச்சர் -செந்தில் பாலாஜி,
  • சுற்றுச் சூழல் அமைச்சர் – என்.மரியம் பிச்சை,
  • மீன்வளத் துறை அமைச்சர் – கே.ஏ.ஜெயபால்,
  • சட்ட அமைச்சர் – இசக்கி சுப்பையா,
  • சுற்றுலாத் துறை அமைச்சர் – புத்தி சந்திரன்
  • தொழிலாளர் நலத் துறை அமைச்சர் – செல்லப்பாண்டியன்,
  • சுகாதாரத் துறை அமைச்சர் – டாக்டர் வி.எஸ்.விஜய்,
  • விளையாட்டுத் துறை அமைச்சர் – என்.ஆர். சிவபதி
  • சிறப்பு திட்ட அமலாக்க அமைச்சர் – எஸ்.பி.வேலுமணி,
  • ஊரகத் தொழில் துறை அமைச்சர் – எம்.சி.சம்பத்,
  • வருவாய்த்துறை அமைச்சர் – தங்கமணி,
  • செய்தித் துறை அமைச்சர் – ஜி.செந்தமிழன்

ஆகியோர் பதவியேற்றனர்.

=========================================

படத்திற்கு நன்றி: தமிழக அரசின் செய்தித் துறை

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *