தமிழ்ப் புத்தாண்டில்…
இரண்டாய், மேலாய்க் கிடைத்திடவே
சித்திரை வந்தது சிறப்புடனே
சீர்மிகு விஜய புத்தாண்டாய்,
நித்தமும் இனிமேல் நந்நாளென
நம்பியே உழைத்து நலம்பெறுவோம்,
தத்துவம் இதுதான் தழைத்திடெனத்
தமிழர் ஆண்டில் வாழ்த்துவமே…!
-செண்பக ஜெகதீசன்…
படத்திற்கு நன்றி:
http://messages.365greetings.com/holiday/tamil-new-year/tamil-new-year-wishes.html
அருமையான கவிதையின் பகிர்விற்கு நன்றி. தங்களுக்கும் வல்லமை நண்பர்கள் அனைவருக்கும் என் தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
புத்தாண்டு வாழ்த்துக்களைத் தாங்கி நிற்கும் அழகிய கவிதையைப் படைத்தளித்த கவிஞருக்குப் பாராட்டுக்களும், புத்தாண்டு வாழ்த்துக்களும்!!
அனைவருக்கும் இப்புத்தாண்டு நன்மைகளையே வாரி வழங்க உளங்கனிந்த நல்வாழ்த்துக்கள்!
…மேகலா
உழைத்து வாழும் எண்ணமுடையவர்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வருடமும் இனிமையானதாகவே அமையும் என்மதி உணர்த்தும் அழகான வாழ்த்துக் கவிதை.
திரு.செண்பக ஜெகதீசன் அவர்களுக்கும் மற்ற அனைத்து நண்பர்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
திருவாளர்கள்- பர்வதி இராமச்சந்திரன்,மேகலா இராமமூர்த்தி,சச்சிதானந்தம் ஆகியோருக்கு
என் உளங்கனிந்த நன்றி..
அனைவருக்கும் என் ‘விஜய’ புத்தாண்டு வாழ்த்துக்கள்…!
கவிதையின் முதல்வரி-
‘இத்தரை காணும் இன்பமெலாம்’ என வரவேண்டியது..
தவறுக்கு வருந்துகிறேன்…!
-செண்பக ஜெகதீசன்…