வீடு தேடி வரும் மின்னாளுகை
ஜெனிவாவில் 2011 மே 16 அன்று நடைபெற்ற தகவல் சொசைட்டி குறித்த உலக உச்சி மாநாட்டின் உயர்நிலை தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 2015ஆம் ஆண்டை நோக்கி ஒருங்கிணைந்து பணியாற்றுவது என்பது குறித்து மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில் சிபல் பேசியதாவது:-
உலக சமூகத்தைத் தகவல் தொழில்நுட்பச் சமூகமாக மாற்றுவதில் உள்ள பிரச்சினைகள் குறித்து நம்முடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக இங்கே நாம் கூடி இருக்கிறோம். சர்வதேச தொலைத் தொடர்பு ஒன்றியமானது மே 17 அன்று தனது 146 வது ஆண்டு செயல்பாட்டை நிறைவு செய்ய உள்ளது. மக்களை மையப்படுத்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட இந்த ஒன்றியத்தின் சீரிய பணிகளை இத் தருணத்தில் பாராட்டுகிறேன்.
கடந்த பத்தாண்டுகளில் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பங்கள் உலகம் முழுவதும் பரவி அதிகமான மக்கள் இன்டர்நெட் வசதி பெற்றுள்ளனர். மொபைல் போன்களின் தொலைத் தொடர்பில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. 2008ஆம் ஆண்டு மொபைல் போன்களைப் பயன்படுத்தியவர்களின் விகிதம் 49.5 சதவிகிதமாக இருந்தது. தற்போது மார்ச் 2011இல் இது 67.98 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
2000ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபை புதிய நூற்றாண்டின் வளர்ச்சி இலக்குகளை அறிவித்தது. அதற்கு தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்பங்கள் பேருதவியாக இருக்கும். நாட்டின் தொலைத்தொடர்பு அடர்த்தி, 70 சதவிகிதமாக உள்ள நிலையில் இந்தியாவின் தேசிய அகண்ட அலைவரிசைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 120 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அகண்ட அலைவரிசை பயன்பாட்டாளர்களாக உள்ளனர். மின் ஆளுகை சேவைகள் மூலம் சாதாரண மனிதனின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த இந்தியா தயாராக உள்ளது.
தேசிய வயர்லஸ் பிராட்பேண்ட் திட்டத்தையும் இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது. அரசின் முயற்சிகளில் தனியார் துறையின் பங்களிப்பையும் ஊக்குவிப்பதற்கு 3ஜி மற்றும் பிடபிள்யுஏ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்கான ஏலத்தை இந்தியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து சேவை நிறுவனங்கள் ஒயர்லஸ் அகண்ட அலைவரிசை நெட்ஒர்க்குகளை அறிமுகப்படுத்தத் தொடங்கியுள்ளன. விரைவில் நாடு முழுவதும் இந்தச் சேவைகள் கிடைக்கும்.
அகண்ட அலைவரிசை குறித்த மின் சேவைகள் அளிப்பதற்கான பொது கட்டமைப்பு வசதிகள் தயாரானதும் ஜி2பி, பி2பி, பி2சி போன்ற மின் சேவைகளைச் சாதாரண மனிதனின் வீட்டு வாசல் படிக்கே கொண்டு செல்லும் அடுத்த சவால் எங்கள் முன் உள்ளது. எனவேதான் தேசிய மின் ஆளுகைத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் 100க்கும் மேற்பட்ட சேவைகள் சாதாரண மக்களின் வீடு தேடிச் சென்று வழங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கபல் சிபல் பேசினார்.
================================================
தகவல் – பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை
இந்த ஜி2பி, பி2பி, பி2சி களை கேட்டாலே குலை நடுங்குது. இந்த கபில் சிபல் தானே அன்று உளறிக்கொட்டி, கிளறியும் விட்டு, மூட மறந்தவர்.
2 G மற்றும் 3 G போதும் சார்! புதியவைகளை வரவேற்று, உச்ச நீதிமன்றம் அதனை அலசி ஆராய்ந்து, தீர்ப்பளிக்கையில் உங்க பேரனுக்கும் பல் விழுந்திருக்கும் சார்!