இலக்கியம்கவிதைகள்

மனிதனாக்க…

செண்பக ஜெகதீசன்         

 

சுடச்சுடத் தங்கத்தை உருக்கி

சூடிட நகைகள் செய்கிறோம்..

அடித்துக் கல்லைச் செதுக்கி

அழகு சிற்பம் செய்கிறோம்..

 

அல்லல்தான் வந்து வாழ்வில்

ஆளாக்குகிறது மனிதனை..

அதுதெரியாமல் கிடந்து

அழுது சாகிறாயே மனிதனே…!

படத்துக்கு நன்றி

http://dawn.com/2012/05/04/china-india-no-longer-bullish-for-gold/


 

Print Friendly, PDF & Email
Download PDF
Share

Comments (3)

 1. Avatar

  நல்லதொரு கருத்தை சுருங்கச் சொல்லியிருக்கிறீர்கள். பளிச்சென்று மனதில் பதிகிறது கவிதை வரிகள். மிக்க நன்றி.

 2. Avatar

  “அல்லல்தான் வந்து வாழ்வில்
  ஆளாக்குகிறது மனிதனை..
  அதுதெரியாமல் கிடந்து
  அழுது சாகிறாயே மனிதனே…!”

  சூப்பர் வரிகள் ஜெகதீசன். அருமை

 3. Avatar

  திருவாளர்கள், பார்வதி இராமச்சந்திரன், தனுசு ஆகியோரின்  
  பாராட்டுரைக்கு மிக்க நன்றி…!
  -செண்பக ஜெகதீசன்…

Comment here