பெற்றோர்

 

பி.தமிழ் முகில் நீலமேகம்

 

தட்டுத் தடுமாறி மெல்ல
எட்டு எடுத்து வைக்கையிலே
பட்டுக் கரம் தா என்
கட்டித் தங்கமே என்றேந்தி
எட்டி வைக்கும் அடிகளுக்கெல்லாம்
தட்டிக் கொடுத்து உற்சாகமூட்டி
எட்டுத் திக்கு சென்றாலும்
கட்டி ஆள்வாய் உலகையே
நாட்டிடுவாய் வெற்றிக் கொடியையே !!!
என்று
உற்சாகமூட்டும் அன்னை தந்தை
உற்ற துணையாய் இருக்கையிலே
உன்னத நம்பிக்கை  மலையென
உள்ளமதில் எழுந்து நிற்க
உலகையே கைப்பற்றி விட்டது போன்றொரு
உயர் எண்ணம் உள்ளமதில் குடியேற
உள்ளங்கையில் தவழ்ந்தாடும் வெற்றி மாலைகள் !!!

Share

Comments

6 responses to “பெற்றோர்”

  1. உற்சாகமூட்டும் அன்னை தந்தை
    உற்ற துணையாய் இருக்கையிலே
    உன்னத நம்பிக்கை  மலையென
    உள்ளமதில் எழுந்து நிற்க
    உலகையே கைப்பற்றி விட்டது போன்றொரு
    உயர் எண்ணம் உள்ளமதில் குடியேற
    உள்ளங்கையில் தவழ்ந்தாடும் வெற்றி மாலைகள் !!!

    இந்த வரிகள் மிகவும் பிடித்தது தமிழ்முகில்.

    அன்புடன் 
    ….. தேமொழி 

  2. மிக்க மகிழ்ச்சி. மனமார்ந்த நன்றிகள் தோழி.

  3. சச்சிதானந்தம்

    அழகான வரிகள். வாழ்த்துக்கள் திருமதி.தமிழ்முகில் நீலமேகம் அவர்களே.

  4. மனமார்ந்த நன்றிகள் சச்சிதானந்தம் ஐயா அவர்களே !!!

  5. மிக அழகான, உற்சாகமூட்டும் கவிதை.. மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் திருமதி.தமிழ்முகில் அவர்களே…

  6. மிக்க நன்றி திருமதி.பார்வதி இராமச்சந்திரன் அவர்களே !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *