மானுடவியல் பேராசிரியர் சத்யபால், சென்னையில் பேசுகின்றார்

0

ஆந்திர பல்கலைக்கழகத்தின் மானுடவியல் பேராசிரியர் டாக்டர் பி.டி.சத்யபால், இந்திய மரபார்ந்த வரலாற்றின் பின்னணியில் தன் உரையாடலை நிகழ்த்துபவர். சாதி, அதன் தோற்றம், வரலாற்றில் சாதி அடைந்திருக்கும் இடம் என அவர் அடுக்கும் ஆண்டுக் கணக்குகளும் நிகழ்ச்சிகளும் ஆச்சர்யம் தரத்தக்கன. ஒரு துண்டு காகிதக் குறிப்பும் இன்றி ஒவ்வொரு ஆண்டும் அதில் நடந்த நிகழ்வுகளையும் அவரின் அழகான, ஆழமான, எளிமையாய் யாருக்கு வேண்டுமானாலும் புரியக் கூடிய ஆங்கிலத்தில் கூறும் போது ஆயிரக்கணக்கான வரலாற்று நூல்களைப் படித்த அனுபவம் கிட்டும்.

இந்திய மக்களின் ஒரே ஒற்றுமையாய் விளங்கும் சாதிய அமைப்பின் தோற்றம், அதன் வளர்ச்சி அது இன்றுவரை அடைந்திருக்கும் பல்வேறு பரிணாமங்கள், பருவ நிலை மாற்றங்கள் என அனைத்தையும் அறிவியல்பூர்வமாகத் தன் உரையாடல் மூலம் அவர் வெளிக்கொணர்கின்றார். பெரும்பான்மை மக்களைக் குறைந்தபட்ச அளவே உள்ள பார்ப்பனர்கள் எப்படி வரலாற்றின் இடுக்குகளிலெல்லாம் இருந்துகொண்டு ஆட்டிப் படைக்கின்றார்கள் என்பதைச் சத்யபாலின் உரையில் தெளிவாக நம்மால் உணர முடியும்.

சாதியற்ற சமூகத்தை உருவாக்க, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களின் ஒற்றுமையும் வலிமையும் எவ்வளவு அவசியம் என்றும் அதை உருவாக்க இந்திய நிலப் பரப்பெங்கும் எழுந்த தலைவர்கள், அவர்களின் பணிகள், ஆளுமைகள் என ஆண்டின் அடிச்சுவடியோடு அவரின் உரை அமைந்திருக்கும்.

வெற்றுக் கூச்சல் போடும் அரங்காக அது இல்லாமல், அறிவின் ஊற்றாக, கற்றுக்கொள்வதற்கான வகுப்பறையாக புத்தாக்கம் செய்துகொள்வதற்கான இடமாகச் சத்யபால் அவர்களின் உரை அமைந்திருக்கும்.

இது எல்லாவற்றிற்கும் மேலாக அவரின் உரையாற்றும் திறன், தொடர்ந்து எட்டு மணி நேரங்கள். அவ்வளவு கருத்துகள் சுரக்கும் அறிவார்ந்த தகவல்கள். இப்படிப்பட்ட மனிதரைச் சந்திக்க இது சரியான தருணம்.

ஒருமுறை அவரின் கூட்டத்தில் பங்கெடுத்துப் பாருங்கள்.

சத்யபால் மீண்டும் சென்னையில் பேசுகின்றார், வரலாற்றைப் புரிந்துகொள்ள வாரீர்.

நாள்: 28.05.2011

Place:

The brothers of holycross,
sterling towers,
123, sterling road,
nungambakkam,
chennai-600034.
ph-28272595

தொடர்பு கொள்ள:

ஆர்.ஆர்.சீனிவாசன்: 9444065336
மோகன்: 99620 71957, 94432 21600

=========================

தகவல் : ஆர்.ஆர்.சீனிவாசன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.