‘ஓடும் செம்பொனும்’…
செண்பக ஜெகதீசன்
இரும்புக்கு இல்லாத மதிப்பை,
தங்கத்துக்கும் வெள்ளிக்கும்
தந்து, ஆசையில்
தடுமாறுகிறான் மனிதன்-
தடம்மாறியே..
புடம்போட்ட தங்கங்களாய்
கடவுளின் உண்மை அடியவர்கள்..
அவர்கள்தான்,
‘ஓடும் செம்பொனும்
ஒக்கவே நோக்குவார்’…!
படத்திற்கு நன்றி
http://www.123rf.com/photo_5811938_gold-bar-isolated-over-square-white-background.html
/////ஓடும் செம்பொனும்
ஒக்கவே நோக்குவார்’…!////
உண்மை. சிறந்ததொரு கருத்தைச் சுமந்து வந்த கவிதை. பகிர்விற்கு மிக்க நன்றி.
படித்து ரசித்துப் பாராட்டிய
பார்வதி இராமச்சந்திரன் அவர்களுக்கு
மிக்க நன்றி…!