இலக்கியம்கவிதைகள்

கடல்நகர் காரோண நீலாயதாக்ஷியே

 

நாகை வை. ராமஸ்வாமி    neelaiyadhakshi

 

உள்ளின் உள்ளே உள்ளவளாய்

உள்ளும் வெளியுமாகி நிற்கின்றாய்

பள்ளம் அனைத்தும் நீக்குகிறாய்

கள்ளம் எல்லாம் களைகின்றாய்

 

என்னென்பேன் எவ்விதம் சொல்வேன் நின்னெழிலை

என்னியதக் கமலமதில் என்றும் அமர்ந்தருளும்

பொன்மயமானவளே புன்னகை பூத்தவளே

எனதருமைத் தாயே நீலாயதாக்ஷியே

 

கண்கள் கயலொத்த காரணமோ

கண்காட்சி தந்தாய் அதிபக்தன் குளிர

பண் பாடினான் மெய்மறந்து நின் புகழை

எண்ணம் ஒன்றானானை நின்னடிக் கொண்டாயே

 

மலர் வாசப் பந்தல் தோரண மாலையுடன்

உலகாளும் உத்தமியே உன் பதம் போற்றி

குளமாய்க் கண்கள் ஆனந்தமுற

உளம் குளிர அலங்கார ஊஞ்சலிட்டோம்

 

உல்லாசம் பொங்கிட ஒய்யார எழிலுடன்

நலம் வளமாக பொன்னூஞ்சல் ஆடிடுவாய்

சீலமிகு சிங்காரி சீர் பெற ஆடிடுவாய்

வெள்ளமாய்க் கருணை பொழிந்திடுவாய்

 

கடல்நகர் காரோண நீலாயதாக்ஷியே!                               

 

Print Friendly, PDF & Email
Download PDF
Share

Comments (3)

 1. Avatar

  பக்தி ரசம் சொட்டும் அற்புதக் கவிதை. மிக அருமையானதொரு பகிர்விற்கு என் உளமார்ந்த நன்றி.

 2. Avatar

  அன்னை அருளினால், எதுவும் கை கூடும்.  பாராட்டுக்கும் நன்றி.  அதுவும் அன்னை திருவடிக்கே சமர்ப்பணம்.  அன்னை அருளுடன் தங்கள் அனைவருக்கும் நலம், வளம் செழிப்புற பிரார்த்தனை.. வணக்கம்.  ஸாய்ராம்.

 3. Avatar

  Very well written by the great Fondly called Joojoo Uncle.
  It is always a pleasure to see his instincts and thoughts reflecting in his poems.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க