ஈஸ்வர அல்லா தேரே நாம்!
சு. ரவி
வணக்கம்,வாழியநலம்
அண்ணல் காந்திஜியின் ஜயந்திக்கான பகிர்வு.
தியானநிலையில் அமர்ந்திருக்கும் காந்திஜியின் இந்த ஓவியத்தை வரைந்ததும், மேலே அவருக்குப் பிடித்தமான “ரகுபதி ராகவ ராஜாராம்” பாடல் வரிகளை எழுதும் போது என்னை அறியாமல் ஏனோ அப்பாடலின் இரண்டாம் வரியான் “ஈஸ்வர அல்லா தேரே நாம்” என்ற வரிகளை எழுதிக் கையொப்ப்ம் இட்டு வரைந்த தேதியைப் பதிவு செய்தேன்..
என் மனைவி வஸந்தியிடம் அதைக்காட்டிய போது அவள் சுட்டிக் காட்டிய தேதிப் பொருத்தம் கண்டு வியந்தேன்.
ஆம், வரைந்த தேதி DEC 6th…
சு.ரவி
பார்க்க,ரசிக்க…
எனக்கொரு ஐயம்! “ரகுபதி ராகவ ராஜாராம்” எனும் காந்திஜிக்குப் பிடித்தமான பாடலில் வரும் “ஈஸ்வர அல்லா தேரே நாம்” என்பதை நாம் அனைவரும் கோரசாகப் பாடி பரவசமடைகிறோம். நம் விசாலமான புத்தி, எல்லா மதமும் சம்மதமே எனும் சமரச சன்மார்க்க எண்ணம் பாராட்டத் தக்கதுதான். ஆனால், நான் பார்த்தவரை இந்த வரிகளை நாம் மனமுவந்து ஏற்றுக்கொண்டது போல மற்றவர்களும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்களா? அந்தக் கருத்து அவர்களுக்கும் ஏற்புடையதுதானா? நம்மைப் போல அவர்களும் அதே உணர்வோடு பாடி மகிழ்ந்து ஏற்றுக் கொள்கிறார்களா என்பதைத் தெரிந்து கொள்ள ஆசை.
இந்துமதம் சார்ந்த பல நிகழ்ச்சிகளில் இந்துக்கள் அல்லாத பிறமத்ச் சகோதரர்கள் மனம் உவந்து பங்கேற்பதை நான் கண்டிருக்கிறேன். காஞ்சிப் பெரியவரிடம் மரியாதை பாராட்டிய இஸ்லாமிய, கிறித்தவர் பற்றிய நிகழ்வுகளைப் படித்திருக்கிறேன். புனே நகரின் மையப் பகுதியில் இஸ்லாமியர்கள் இணைந்து 10 நாள் விநாயக சதுர்த்தியைக் கொண்டாடுவதை இன்றும் காணலாம்.சீர்டியில் இந்துக்கள்நடத்தும் உருஸும், இஸ்லாமியர் கொண்டாடும் ராமநவமியும் பாபா அவர்களால் தொடங்கப் பட்டு இன்றும் பின்பற்றப்படுகிறது.
சபரிமலை யாத்திரை எருமேலி வாவைநடையில் தொடங்கும்போது ஐயப்ப பக்தர்களுக்கு உதி வழங்கப் படுகிறது. பிறை நிலாச் சின்னம் தரித்த இருமுடியோடு ஐயப்பனைத் தரிசிக்கும் இஸ்லாமியரும், இந்துக்களும், கிறிஸ்தவரான திரு ஜேஸுதாஸின் இனிய ஹரிவராஸனத்தில் உருகுகின்றனர்..
கலக்கம் நீக்கிய கண்களால் கண்டால் எல்லம் ஒரு ஒளிதான்!
சு.ரவி
ஆழ்ந்த அமைதியுடன் கூடிய காந்தியின் ஓவியம் பார்க்கும் போது நம் மனமும் அமைதி கொள்கிறது. தத்ரூபமான ஓவியம் பாராட்டுக்கள்.
ஓவியம் வரைந்த தேதி நம் இந்திய ஒருமைபாட்டுக்கு ஒரு கருமை தந்த நாள்.
அருமையான ஓவியம், கருத்து. நல்லதோர் பகிர்வு, நன்றி ரவி.
அன்புடன்
….. தேமொழி
எம்மதத்தினராயினும் இனத்தவராயினும் உண்மை யுணர்ந்து பண்பட்டவர்கள் கொஞ்சம்…பதவிஉயர்வு பொறுப்புப் பங்கு, படிக்க சலுகை கிடைப்புப் பங்கு,ஆளும் நாற்காலி அரசியல் பங்கு என்று வரும் போது பாருங்கள் இதன் உண்மை முகத்தை….இந்த நிலைதான் காந்தியின் ஆத்மாவை இன்னும் கு… ல் துளைத்து கொண்டிருக்கிறது… இந்த தலைப்பை விட ‘சப்கா மாலிக் ஏக்’ என்ற பாபா வரிகள் மகுடமாயிருந்திருக்கும் மகாத்மாவிற்கு.