Dialogue பேசுவோம் வாங்க!
தேசிய விருது பெற்ற தமிழ் திரைக்கலைஞர்களுடன் ஒரு சந்திப்பு
திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியின் தலைவர் திரு. கு. கருணாநிதி அவர்களும், எழுத்தாளர் திரு. பவா. செல்லத்துரை அவர்களும் இணைந்து, திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியின் திறந்த வெளி அரங்கில் ஒரு நேர்காணல் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தவுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் 2011ம் வருடம் தேசிய விருது வென்ற திரைக்கலைஞர்கள் கலந்து கொள்கிறனர். திரைக்கலைஞர்கள் விவரம் பின் வறுமாறு:
‘ஆடுகளம்’ திரைப்படத்தின் இயக்குனர் திரு. வெற்றிமாறன், படத்தொகுப்பாளர் திரு. கிஷோர், நடன அமைப்பாளர் திரு. தினேஷ், திரைக்கலைஞர் திரு. வா.ஐ.ச. ஜெயபாலன், ‘மைனா’ திரைப்பட நடிகர் திரு. தம்பி இராமையா, ‘தென் மேற்கு பருவக்காற்று’ இயக்குனர் திரு. சீனுஇராமசாமி, திரைக்கலைஞர் திருமதி. சரண்யா, ‘ஷ்யாம் ராத் ஷிகார்’ என்னும் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் திரு. முரளி, ‘திரைச்சீலை விலக்கி’ என்னும் புத்தகத்திற்கு ஓவியங்கள் வரைந்த ஓவியர் திரு. ஜீவா ஆகியோர் உரையாடலில் கலந்து கொள்வர்.
இவர்களுடன் திரைப்படத் தொகுப்பாளர் திரு. லெனின், திரைப்பட இயக்குனர் திரு. அழகம்பெருமாள் மற்றும் எழுத்தாளர் திரு. ஷஜி அகியோரும் கலந்துகொள்ள உள்ளனர்.
நிகழ்ச்சி பற்றிய மற்ற விவரங்கள் அறிய 9443222997, 9952405818, 9443542842 என்ற செல்லிடப் பேசிகளில் தொடர்பு கொள்ளலம்.