மார்டன் சினிமா தயாரித்து வழங்கும்
உடும்பன்


கூலிப்படை
காசு கொடுத்து எதிரிகளை கொல்ல அரசியல்வாதிகளுக்கும், தொழிலதிபர்களுக்கும் தேவைப்படுவது கூலிப்படை.  நாம் திரைப்படத்திலும், நேரிலும், அரசியல்வாதிகளுக்குப் பின்னாலும், தொழிலதிபர்களுக்குப் பின்னாலும் நிற்க்கும் கூலிப்படைகளைப் பார்கிறோம்.  அவர்கள் எல்லாம் யார்?  ஏன் இப்படி கூலிப்படைகளாக உருவானார்கள் என்பதை சித்தரிக்கும் படமே “உடும்பன்”.

உடும்பன் கதை ஆய்வுக்காக, கொலை செய்வதைத் தொழிலாக கொண்ட அடியாட்களை நேரடியாகச் சென்று சந்தித்தோம்,.கைதிகளாக இருக்கும், இருந்த கூலிப்படை ஆட்களை சந்தித்த போது, பல திடுக்கிடும் சம்பவங்கள் கதைக்காக கிடைத்தன.  சில ஆட்கள் திரைப்படத்திற்காக கதை திரட்டுகிறோம் என்பது புரியாமல், யாரைக் கொல்ல வேண்டும்? கை, கால்களை எடுக்க வேண்டும? என்று கேட்டு அதிர்ச்சியடையச் செய்த சம்பவங்களும் உண்டு.

உடும்பன் கதைக்களம் முழுவதும் கருவேலம் காட்டுப் பகுதியில் படமாக்கப் பட்டுள்ளது.  வறண்ட பகுதியாக இருந்தாலும், அங்கும் அண்ணன், தம்பி பாசத்தை உணர்த்தும் படமாகவும் உடும்பன் உருவாகியுள்ளது.
திலீப் ரோஜர்

இந்தியாவின் நம்பர் ஒன் பைக் ரேசர் ஆன திலீப் ரோஜர், மேற்கத்திய நாடுகளில் பயணம் செய்து மேற்கத்திய கலாச்சாரத்தில் வளர்ந்து வருபவராவார்.  அவர் உடும்பனாக உருவானது வியக்க வைக்கும் நிகழ்ச்சியாகும்.  அவருடைய புகைப்படத்தைப் பார்த்த பின், உடும்பன் கதைகேற்ற நாயகன் அவர் தான் என்று முடிவு செய்து அவரை அணுகிய போது, 100 பேரை அடிக்கும் வீரனாக, பாட்டுக்கு நடனம் ஆடுபவராக, ஒரு வறண்ட கிராமத்து இளைஞனாக,  நடை, உடை, பாவனை மாற்றிக் கொள்ள முடியுமா என்ற  சந்தேகம் அவருக்கு இருந்தது.  பின் அவர் முழு மூச்சுடன் ஓராண்டிற்கு மேல் சண்டைப் பயிற்சி, நடனப் பயிற்சி பெற்ற பின், படப்பிடிப்பிற்கு முன்பே கதைக்களம் நடக்கும் இடத்திற்கு வந்து, அந்த மக்களின் நடை, உடை, பாவனைகளைப் பார்த்து உடும்பனாக உருமாறினார்.  திலீப் ரோஜரை நேரில் பார்த்த யாரும், அவர் தான் உடும்பனாக நடித்துள்ளார் என்று கட்டாயம் நம்பமாட்டார்கள்.

உடும்பு

உடும்பனுக்கு அடுத்து, படத்தில் மிகவும் பேசப்படுவது, உடும்பு.  உடும்பு தனது நடிப்பால் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவரும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஒளிப்பதிவு :  கிச்சாஸ்.,  B.Sc., D.F.Tech.,

நாற்பத்தி இரண்டு வெற்றிப் படங்களுக்கு மேல் பணியாற்றிய கிச்சாஸ் அவர்கள், தான் பணியாற்றிய படங்களில் பெரும்பான்மையானவைகள் கிராமத்துக் கதைகள் என்பதால், இத்திரைப்படத்தில் தனது அனுபவங்களை எல்லாம் ஒன்று திரட்டி உருவாக்கியுள்ளார் என்றால் மிகையாகாது.  படத்தில் பெரும்பான்மையான காட்சிகள் இரவில் நடப்பது என்பதால், இரவு ஒளிப்பதிவில் புகழ் பெற்ற கிச்சாஸ் அவர்களின் திறமைக்குத் தீணியாக அமைந்த்துள்ளது ‘உடும்பன்’.

சனா மற்றும் கீத்திகா

கிராமத்து மற்றும் நகரத்தை சார்ந்த நாயகிகளாக சனா மற்றும் கீர்த்திகா என்ற மலையாள நடிகைகள் உடும்பன் மூலம் அறிமுகம் ஆகின்றனர்.  கிளாஸ்மேட், 20X20 போன்ற வெற்றிப்படங்களில் நடித்த சனா தமிழுக்கு உடும்பன் மூலம் அறிமுகம் ஆகின்றார்.

பாடல்கள்

நீண்ட இடைவெளிக்குப் பின் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் ஐந்து காதல் பாடல்களும், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் இரண்டு பாடல்களும் உடும்பன் திரைப்படத்தில் இடம் பெற்றதன் மூலம் பாடல்களால் படத்தின் தரம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

சண்டைப்பயிற்சி
ஈ, பேராண்மை, இயற்கை போன்ற திரைப்படங்களுக்கு சண்டைக்காட்சிகளை வடிவமைத்து பயிற்றுவித்த ‘மிரக்கிள்’ மைக்கேல், முதல் முறையாக கிராமத்துக் கதைக்கு சண்டைக்காட்சிகளை வடிவமைத்து, பயிற்றுவித்து, தமிழ்த்திரையுலகில் சண்டைப்பயிற்சியில் பல புதிய உத்திகளை உருவாக்கியுள்ளார்.
கலை :  சிவா யாதவ்.
படத்தொகுப்பு :  வி.டி. விஜயன்.
நடனம் : ராஜூ சரபையா, ரமேஷ் ரெட்டி.
இணை இயக்கம் : எஸ்.டி. குணசேகரன்.
மக்கள் தொடர்பு : எஸ். செல்வரகு.
தயாரிப்பாளர் : எஸ். ஜெகநாதன்.
எழுத்து, இயக்கம், இசை :  எஸ். பாலன்.
வலைத்தளம் : www.udumban.com

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.