கண்ணன் ஒரு கைக்குழந்தை – கவிஞர் வாலி

கண்ணன் ஒரு கைக்குழந்தை – கவிஞர் வாலி -இசைஞானி இளையராஜா-கே. ஜே.யேசுதாசுடன்.. பி. சுசீலா

கண்ணன்  ஒரு  கைக்குழந்தை..

ராணி சந்திரா என்னும் கதாநாயகியுடன் மார்கண்டேயர் சிவகுமார் கதாநாயகனாக தோன்றி  நடித்த படம் பத்ரகாளி. இப்படம் வெளியாகும் முன்னதாக இக்கதாநாயகி அகால மரணமடைந்தார் என்பது மக்கிளிடம் ஒரு இரக்கத்தைத் தோற்றுவித்ததுடன் படத்தின் வெற்றிக்கும் வழி வகுத்தது.

 

கண்ணன் என்கிற பெயர்ச் சொல்லை..  கடவுளின் திருப்பெயரை பல்லவியில் வைத்து உருவாக்கியிருக்கும் பெரும்பாலான  திரைப்பாடல்கள் அமோக வெற்றியைப் பெற்றிருக்கின்றன.  இதோ..  ‘கண்ணன் ஒரு கைக்குழந்தை’ ..

இசைஞானி இளையராஜா இன்னிசையில் விளைந்த அருமையான கீதம்.. காவியக் கவிஞர் வாலியின் கை வண்ணம்..

கே. ஜே. யேசுதாசுடன்.. பி. சுசீலா இணைந்து பாடிய பாடல். கணவன் – மனைவி உறவிற்கும் தாம்பதியத்திற்கும் சாமரம் வீசும் வரிகள்!!

இசைஞானி இளையராஜா தன்  திரையுலகப் பிரவேசத்திற்கு முன்னதாக நாடகங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தபோது அமைக்கப்பட்ட வர்ணமெட்டினை இப்படத்தில் பயன்படுத்த அதற்கேற்ற  வரிகளை திரைக்காக கவிஞர் வாலி அவர்கள் வரைந்துதர .. இனிய வடிவில் உருவான இதமான பாடல்! ஏ சி திருலோகச்சந்தர் இயக்கத்தில்.

நீங்காத கீதமாய் காதில் விழுந்து நெஞ்சில் நிறையும் மெலோடியஸ் பாடல் வரிசையில் ..  தோ..  ‘கண்ணன் ஒருகைக் குழந்தை’ ..

 

காலத்தை வென்று இன்றும் கேட்கப்படுகிறது அதே ஜீவனுடன்!!

கண்ணன் ஒரு கைக்குழந்தை

கண்கள்சொல்லும் பூங்கவிதை

கன்னம்சிந்தும் தேனமுதை
கொண்டுசெல்லும் என்மனதை

கையிரண்டில் நானெடுத்துப்

பாடுகின்றேன் ஆராரோ
மைவிழியே தாலேலோ
மாதவனே தாலேலோ

உன்மடியில் நானுறங்க
கண்ணிமைகள் தான்மயங்க
என்னதவம் செய்தேனோ
என்னவென்று சொல்வேனோ

ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும்
சொந்தமிந்த சொந்தமம்மா
வாழ்விருக்கும் நாள்வரைக்கும்
தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா

அன்னமிடும் கைகளிலே
ஆடிவரும் பிள்ளையிது
உன்னருகில் நானிருந்தால்
ஆனந்தத்தில் எல்லையது

காயத்ரி மந்திரத்தை
உச்சரிக்கும் பக்தனம்மா
கேட்கும்வரம் கிடைக்கும்வரை
கண்ணுறக்கம் மறந்ததம்மா

மஞ்சள்கொண்டு நீராடி
மைக்குழலில் பூச்சூடி
வஞ்சிமகள் வரும்போது
ஆசைவரும் ஒருகோடி

கட்டழகன் கண்களுக்கு
மையெடுத்து எழுதட்டுமா
கண்கள்படக் கூடும்என்று
பொட்டுஒன்று வைக்கட்டுமா  (கண்ணன் ஒரு)

ஆராரிரோ ஆராரிரோ

ஆராரிரோ ஆராரிரோ 

 

http://www.youtube.com/watch?v=IRMy50RggbY

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.