பிம்பம்
எல்.கே.
கண்ணாடி முன்
நின்றிருந்தேன் – மெல்லக்
காட்சிகள் மாறின
கண்ணாடியில் – என்
பின் நீ – கண்களில்
காதலும் காமமும் தேக்கி..
உன்னிரு கரங்களால் என்
தோள் பற்றி – புரளும்
என் முடி ஒதுக்கி – அன்பாய்
உன் இதழ் பதித்தாய் – மெல்ல
எனை இழுக்க – கண் மூடி
சிலிர்த்தேன்…
இமை பிரித்து
உனைப் பார்க்க முயன்ற
தருணத்தில்
காற்றில் கலந்து போனாய்
நீ….
படத்திற்கு நன்றி : http://bluemustang5.files.wordpress.com/2011/02/native-american-love.jpg?w=949