பொது

பாலிமர் தொலைக்காட்சியில் ‘பாக்கெட் மணி’

பாலிமர் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் காலை பத்து மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சி தான் ‘பாக்கெட் மணி’.  கலகலப்பாக புதிய முறையில் வடிவமைக்கப் பட்டுள்ள இந்த நிகழ்ச்சி கல்லூரிகள், அடுக்குமாடிக்குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் தகவல் தொழில் நுட்பப் பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்படுகின்றது.

போட்டியாளர்கள் தங்களுக்கு வைக்கப்படும் போட்டியில் வெற்றிபெற்றால் உடனடியாக ரூபாய் ஐந்நுறு பரிசாக வழங்கப்படுகிறது.  ஒவ்வொரு போட்டியிலும் ஐந்து நண்பர்கள் பங்கு பெறுகின்றார்கள்.  இதனால் கலகலப்புக்கு பஞ்சமில்லை.  கொடுக்கப்பட்ட கால அளவைப் பயன்படுத்தி, வெற்றி காண்பவர்கள் நண்பர்களின் ‘பாக்கெட் மணி’ யை பெற்றுக்கொள்வார்கள்.

 

போட்டியின் சில காட்சிகள் இங்கே:

 

 

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க