பொது

’பிரமோஸ்’ ஏவிய பத்தாம் ஆண்டு நிறைவு விழா

2001ம் ஆண்டு ஜுன் 12 ம் நாள் முதன் முதலாக ஒலியின் வேகத்தில் ஏவப்பட்டது பிரமோஸ் ஏவுகணை.  ஒலியின் வேகத்தை விட 2.8 மடங்கு அதிக வேகத்தில் விண்ணில் பாய்ந்து இலக்கை அழிக்கும் சக்தி வாய்ந்தது பிரமோஸ் ஏவுகணை.   இதனை தரையிலிருந்து மட்டுமல்ல போர்க்கப்பலில் இருந்தும் ஏவ முடியும்.  இந்த ஏவுகணையின் தயாரிப்பு மற்றும்
தரப்படுத்துதல் அனைத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அமைப்பு தான் ‘பிரமோஸ் ஏவுகணைத்திட்ட அமைப்பு’ (BrahMos AeroSpace).

இந்தியா மற்றும் ரஷ்யாவின் ஒருங்கிணைந்த கூட்டுத்திட்டத்தின் ஒரு படைப்பே பிரமோஸ் ஏவுகணை.  இத்திட்டத்தில் இந்தியா மற்றும் ரஷ்யாவின் விஞ்ஞானிகளின் குழுக்கள் இணைந்து பணியாற்றுகின்றன.

ஜூன் 12, 2001ம் ஆண்டு பிரமோஸ் ஏவுகணை முதன் முறையாக ஏவப்பட்டதைக் கொண்டாடும் விதமாக, ஜூன் 12, 2011, அன்று, தலைநகர் தில்லியில், பிரமோஸ் ஏவுகணைத்திட்ட அமைப்பின் தலைமைச்செயலகத்தில், ஒரு விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர். அப்துல் கலாம், பிரமோஸ் ஏவுகணைத்திட்ட அமைப்பு தலைமைச் செயலாக்க அதிகாரி டாக்டர். ஏ. சிவதாணு பிள்ளை, சட்டீஸ்கர் மாநில ஆளுநர் திரு. சேகர் தத் மற்றும் இந்திய, ரஷ்ய விஞ்ஞானிகளும் பங்கேற்றனர்.

இவ்விழாவில் முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர். அப்துல் கலாம், பிரமோஸ் ஏவுகணைத்திட்ட அமைப்பு தலைமைச் செயலாக்க அதிகாரி டாக்டர். ஏ. சிவதாணு பிள்ளை, சட்டீஸ்கர் மாநில ஆளுனர் திரு. சேகர் தத் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவைத் தொடக்கி வைத்தனர்.

டாக்டர். ஏ. சிவதாணு பிள்ளை வரவேற்புரை நிகழ்த்தினார்.  தொடர்ந்து முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர். அப்துல் கலாம் அவர்கள், ’பிரமோஸ் ஏவுகணைத் திட்டத்தில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்கள்’ என்ற தலைப்பில் தலைமையுரை நிகழ்த்தினார்.  சட்டீஸ்கர் மாநில ஆளுநர் திரு. சேகர் தத் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.  பின்னர் ‘தலைமைப்பண்பில் ஒரு புரட்சி’ (Revolution In Leadership) என்ற புத்தகத்தை திரு. சேகர் தத் அவர்கள் வெளியிட அதனை டாக்டர். ஏ. சிவதாணு பிள்ளை பெற்றுக்கொண்டார்.

‘பிரமோஸ் ஏவுகணைத்திட்ட அமைப்பு’(BrahMos AeroSpace) மற்றும் இந்திய அறிவியல் கழகங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாகியது.

அதன் பிறகு இந்திய மற்றும் ரஷ்ய விஞ்ஞானிகளுக்கு ’பிரமோஸ் ஏவுகணைத்திட்ட சாதனையாளர்’ விருதுகள் வழங்கப்பட்டன.  சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட இந்திய இளம் விஞ்ஞானிகளுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

 

விழாவின் சில காட்சிகள் :

 

 

 

 

 

 

 

 

 

 

படங்களுக்கு நன்றி :  http://www.brahmand.com

Print Friendly, PDF & Email
Share

Comments (1)

  1. Avatar

    இந்தியாவின் திறமையை உலகறிய செய்த பிரமோஸ் குழுவினருக்கு வாழ்த்துக்கள் !

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க