பொது

தமிழ் நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல் – செய்திகள்

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்  தமிழ் நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல் ஜூன் 19, 2011 அன்று சென்னையில் உள்ள வடபழனி மியூசிக் யூனியனில் நடைபெற்றது.  கடந்த இரண்டு வருடங்களாக இயக்குநர் திரு. பாரதிராஜா தலைவராக இருந்தார்.  புதிய நிர்வாகக் குழுவினருக்கான இந்த தேர்தல் மாலை 4 மணி வரை நடைபெற்றது.  தேர்தல் அதிகாரியாக கவிஞர் திரு. பிறைசூடன் அவர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்.

மூத்த, முன்னணி மற்றும் இளைய இயக்குநர்களும், உதவி இயக்குநர்களும் வாக்களித்தனர்.  திருவாளர்கள்  கே. பாலச்சந்தர்,  எஸ். ஏ. சந்திர சேகர், கே.எஸ். ரவிக்குமார், சேரன், அமீர், ஷங்கர், சசிகுமார், தியாகராஜன், தரணி ஆகியோர் வாக்களித்தவர்களில் சிலராவர்.

இத்தேர்தலில் திரு. பாரதிராஜா மற்றும் உதவி இயக்குநர் திரு. முரளி இருவரும் தலைவர் பதவிக்காகப் போட்டியிட்டனர்.  திரு. அமீர் மற்றும் திரு. அப்துல் மஜீத் இருவரும் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்டனர்.  பொருளாளராக திரு. ஜனனாதனும், துணைத் தலைவர்களாக திருவாளர்கள் சமுத்திரக்கனி மற்றும் சேரன் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நான்கு இணைச் செயலாளர்கள் பதவிகளுக்கு பத்து வேட்பாளர்களும், பன்னிரண்டு செயற் குழு உறுப்பினர் பதவிகளுக்காக முப்பத்தி நான்கு வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.

தலைவர் மற்றும் செயலாளர் பதவிக்கான முடிவுகள் ஜூன் 20, 2011 அன்று வெளியிடப்படன.  சங்கத்தலைவராக இயக்குனர் திரு. பாரதிராஜாவும், செயலாளராக இயக்குனர் திரு. அமீரும் தேர்வாகியுள்ளனர்.

பெயர்

பதவி

பெற்ற வாக்குகள்

பாரதி ராஜா

தலைவர்

1003

சேரன்

துணைத் தலைவர்

முன்பே தேர்ந்து எடுக்கப்பட்டவர்
சமுத்திரக்கனி

துணைத் தலைவர்

முன்பே தேர்ந்து எடுக்கப்பட்டவர்
அமீர்

செயலாளர்

901
பிரபு சாலமன்

இணை செயலாளர்

905
எஸ். எஸ். ஸ்டான்லி

இணை செயலாளர்

716
தம்பி துரை

இணை செயலாளர்

696
வேல் முருகன்

இணை செயலாளர்

655

 

சில காட்சிகள் இங்கே :

 

 

 

 

 

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க