வார ராசி பலன்கள் 10-03-2014-16-03-2014
காயத்ரி பாலசுப்ரமணியன்
மேஷம்:இது வரை நெருக்கம் காட்டி வந்த உறவுகள் இந்த வாரம் சற்று விலகியே இருக்கும். பெண்கள் உங்கள் சக்திக்கு மீறி கடன் வாங்கி செலவு செய்வதை குறைத்துக் கொள்ளுங்கள். மாணவர்கள் புதிய இடங்களில் கவனத்தோ டும் விழிப்புணர்வோடும் இருந்தால், சிக்கல்களை எளிதில் சமாளிக்க முடியும். பணியில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளின் திருப்தியை சம்பாதிக்க சற்று அதிகமாக பாடுபட வேண்டியிருக்கும். பெற்றோர்கள் பிள்ளைகளின் உடல்நலம், மன நலம் இரண்டையும் நல்ல விதமாக பராமரித்து வந்தால், அவர்களின் பாதையில் வெற்றியும், வாழ்த்தும் வந்து சேரும்.
ரிஷபம்: உறவினர்களுக்கு பணஉதவி செய்கையில் சற்று எச்சரிக்கையோடு இருந்தால், உறவுகள் எப்போதும் இணக்கமாக இருக்கும். சுய தொழில் புரிபவர்களின் புதிய முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பிருந்தாலும், லாபம் கையில் கிட்டும் வரை பொறுமை அவசியம். இந்த வாரம் உடன் பிறப்புகளுக்காக அதிக நேரமும், பணமும் செலவு செய்யும் சூழல் நிலவும்.பணியில் இருக்கும் பெண்கள் எல்லா விஷ்யங்களிலும் கவனத்துடன் செயல்பட்டால், பிரச்னைகள், அலைச்சல்களை குறைத்துக் கொள்ளலாம். மாணவர்கள் விளையாட்டுகளில் ஈடுபடும் பொழுது, தகுந்த பாதுகாப்பு விதிகளை கடைபிடித்தல் அவசியம்.
மிதுனம்: பொறுப்பான பதவி வகிப்பவர்கள் ரகசியமாய் வைக்க வேண்டிய செய்திகளை ரகசியமாகவே வைத்தால், நிம்மதியாய் உலா வரலாம். முதியவர்கள் உடலுக்கும், உள்ளத்திற்கும் தேவையான ஓய்வை அளித்தால் புத்துணர்வுடன் பணிகளில் ஈடுபட இயலும். பெண்கள் அறிமுகமில்லாத இடங்களில் இயன்ற வரை சொந்த விஷயங்களை பிறரிடம் பரிமாறிக்கொள்வதை தவிர்த்து விடவும். இந்த வாரம் சில சமயம் சரக்குகள் வரும் வரை வியாபாரிகள் சிறிது பதற்றத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும். பெற்றோர்கள் பிள்ளைகளின் நிறை குறைகளை அறிந்து கொண்டால் அவர்களை நல்வழிப்படுத்துவது எளிதாகும்.
கடகம்: சொந்த மனை வாங்க எடுக்கும் முயற்சிக்குத் தேவையான பணமும், ஊக்கமும் சேரும். பெண்கள் ஆரோக்கியம், உணவு இரண்டிலும் தனி கவனம் செலுத்தி வந்தால், அயர்வின்றி வேலைகளை முடிக்க முடியும். பணியில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைக்கேற்ற இலாக்காவில் பணி புரியும் வாய்ப்பு கிடைக்கும். கலைஞர்கள்,பண விஷயங்களில் எதையும் ஒரு முறைக்குப் பல முறை யோசித்து செய்வதே நல்லது. வேலைகளை முடிக்க முடியும். இந்த வாரம் வியாபாரிகள் எதிர்ப்புகளை சமாளித்து முன்னேறுவார்கள். மாணவர்கள் தேவையில்லாமல் அதிக நேரம் கண் விழித்தலைத் தவிர்த்தால், உடல் நலம் குன்றாமலிருக்கும்.
சிம்மம்: பொது வாழ்வில் இருப்பவர்கள் பிறருக்கு வாக்குக் கொடுக்கும் முன் நிலைமையை சீர்தூக்கிப்பார்த்து செயல்படுங்கள். கசப்பான அனுப வங்களைத் தவிர்த்துவிடலாம். இந்த வாரம் கடன் பிரச்னைகள் பெண்களுக்கு சற்று கொல்லை கொடுத்தாலும், தங்கள் வாக்கு வன்மையால் அனைத்தையும் சமாளித்து விடுவார்கள். வியாபாரிகள் அரசாங்க விவகாரங்களில் தக்க ஆலோசனையுடன் செயல்படுவதன் மூலம் பண விரையத்தைக் குறைத்து விடலாம். பணிவாகப் பேச்சு, இதமான அணுகுமுறை இரண்டையும் மேற்கொள்ளும் கலைஞர்களுக்கு வாய்ப்புக்களோடு பணவரவும் வந்து சேரும்.
கன்னி: பெண்கள் பண வரவிற்கேற்றவாறு செலவுகளை வரிசைப்படுத்திக் கொண்டால், குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவது கடினமாக இராது. மாணவர்கள் சிறிய விஷயங்களை பெரிதாக்கி வம்பு செய்பவரிடமிருந்து ஒதுங்கியிருப்பது நல்லது. பெற்றோர்கள் பிள்ளைகளிடம் இதம், கண்டிப்பு இரண்டையும் தக்கவாறு பயன்படுத்தினால், அவர்களால் பிரச்னைகள் ஏதுமிராது. பணியில் இருப்போர்கள், உயரதிகாரிகளிடம் பணிவாய் நடந்தால், உங்களுக்கு தேவையான சலுகைகள் நழுவாமலிருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் வீண் பிடிவாதத்தை சற்று தளர்த்திக் கொண்டால், உரிய நேரத்தில் உதவிகள் கிட்டும்.
துலாம்: இந்த வாரம் கூட்டுத் தொழிலில் அவசியமில்லாத மாற்றம் எதையும் செய்ய வேண்டாம்.பெண்கள் புதிய உறவுகள், பண வரவுகள் இரண்டிலும் கவனமாய் இருந்தால், பிரச்னைகள் புதிதாய்த் தோன்றாமலிருக்கும்.மாணவர்கள் நண்பர்களின் குறைகளை பெரிதுபடுத்தாமல் அரவணைத்துச் சென்றால்,உங்களுக்கு தோள் கொடுக்க தயாராய் இருப்பார்கள். கலைஞர்கள் வெற்றி கிடைக்கும் வ்ரை எதிலும் அலட்சியம் இன்றி கவனமாக செயல்பட வேண்டும். வியாபாரிகள் புதிய தொழில் துவங்குதல், பெரிய அளவில் விரிவாக்கம் செய்தல் ஆகியவற்றில் நிதானமாகச் செயல்பட்டால் பல நன்மை பெறலாம்.
விருச்சிகம்: வியாபாரிகள் வங்கி கணக்கு வழக்கு ஆகியவற்றை நேரடியாக கவனித்து வந்தால், பொருளாதாரம் இறங்காமலிருக்கும். மாணவர்கள் வாகனங்களில் ஏற்படும் சிறு பழுதை உடனடியாக சீர் செய்தால், அதிக செலவுகள் இருக்காது. உயர் பதவியில் இருப்பவர்கள் முக்கிய பொறுப்புகளை தள்ளிப்போடாமல் செய்து முடித்தால், வெற்றியும் தடையில்லாமல் உங்களைத் தேடி வரும். சிலருக்கு பணியிட மாற்றமும், அதனால் அதிருப்தியும் ஏற்படலாம். முதியவர்கள் உடற் பயிற்சி, உணவு ப் பழக்கம் இரண்டிலும் தேவையான மாற்றங்களை செய்து கொள்ளுங்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும்.
தனுசு: பெண்கள் மிதமான உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் அஜீரணம், வயிற்று வலி முதலியவை தலைகாட்டாமலிருக்கும்பணியில் இருப்பவர்கள் பண பரிமாற்றத்தால் நல்ல நட்பு கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.மாணவர்கள் முக்கிய மான அலுவல்களில் உங்கள் முழு கவனத்தையும் திருப்பினால், விரும்பிய பலன் கிடைப்பது உறுதி.வியாபாரிகள் வரவில் காட்டும் அக்கறையை செலவிலும் காட்டி வந்தால், பொருளாதாரம் கையை கடிக்காமல் இருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் உங்கள் கருத்துக்கு இனிமைப் பூச்சு கொடுத்தால், எதிராளிகளையும் எளிதில் வென்று விடலாம்.
மகரம்: வியாபாரத்தில் சீரான முன்னேற்றம் பெற, வியாபாரிகள் அவ்வப்போது தேவையான புதுமைகளை புகுத்தினால் நல்ல பலன்களை அடையலாம். பெண்கள் அடிக்கடி இல்லத்தில் பயன்படுத்தும் மின் சாதனங்களை நல்ல முறையில் பராமரித்து வந்தால், வீண் செலவுகள் கணிசமாக குறையும். பொது வாழ்வில் இருப்பவர்கள் உங்கள் கோப தாபங்கள் வார்த்தைகளில் பிரதிபலிக்காமலிருந்தால்,நீங்கள் நினைத்தபடி உதவிகள் பெறுவது எளி தாகும். பணியில் இருப்பவர்கள் முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுக்கு சிபாரிசு செய்வதை தவிர்த்து விட்டால், வீண் தலைவலி உங்கள் அருகே வராமலிருக்கும்.
கும்பம்: கலைஞர்கள் தேடி வரும் வாய்ப்புகளை தங்கள் வளர்ச்சிக்கு அடித்தளமாக மற்றிக் கொள்வதன் மூலம் அதிக நன்மைகளை அடையலாம். வேலைக்குப் போகும் பெண்கள் அலுவலகம், இல்லம் இரண்டிடத்திலும் உள்ளபணி சுமையை சமாளித்து நடந்து கொள்ள வேண்டியிருக்கும். வியாபாரிகள் பணத்தைக் கையாளும் போது ஒரு முறைக்கு இரு முறை சரிபார்த்தபின் பட்டுவாடா செய்தால் பணக் கஷ்டம், மனக் .கஷ்டம் இரண்டையும் தவிர்த்து விடலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் மறைமுக எதிரிகளிடம் கவனமாக இருந்தால் இழப்புகளும் நஷ்டங்களும் குறையும்.
மீனம்: மாணவர்கள் மன தைரியம் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எதையும் சமாளிக்கும் ஆற்றல் கிட்டும்.பணியில் இருப்பவர்கள் உடன் பணி புரிபவர்களுடன் சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பற்றிய அலசலைத் தவிர்ப்பது .சிறந்தது. பொது வாழ்வில் இருப்பவர்கள் பொறாமைக்காரர்களின் திட்டத்தை முறியடிக்கும் வகையில் உங்கள் ஆதரவை பலப்படுத்தினால் வெற்றி உறுதி. கலைஞர்களுக்கு தட்டிச் சென்ற வாய்ப்புகள் திறமையின் அடிப்படையில் மீண்டும் உங்கள் வசமாகும். இந்த வாரம் பெண்களின் நிதி நிலையில் சிறிது அதிருப்தி இருந்தாலும்,குடும்பச்செலவுகள் தடையின்றி நடக்கும்.