சி. ஜெயபாரதன்unnamed

காலக் குயவன் ஆழியைச் சுற்றி,
ஞாலம் உருவாக்கி
கோலம் போட்டுக்
பாலம் அமைத்தான் வரலாற் றுக்கு
ஜாலம் பண்ணி !
காலவெளி,
பிரபஞ்சத்தின் பருவம் காட்டும்
கைக் கடிகாரம் !
கடவுளின் பயணக் குதிரை
காலப் பறவை !
பின்னே செல்லாது
முன்னோடும் அகிலத்தின்
முழு மூச்சு !
அரங்கத்துக்கு ஏற்றபடி
கரகம் ஆடும் காலம்
தாளம் மாறும் !

கடந்த காலம்
விடிந்தது !
நிகழ்காலம் நடை கற்குது !
எதிர்காலம் தூங்குது !
குதிரை மாயை என்றால்
தேரோட்டியும்
ஓர் மாயை தான்.
இந்த வையகம்  பொய்யா?
இந்தக் காயம் பொய்யா ?
தாய், தந்தையர்
பொய்யா ?
சிவமும் சக்தியும் மாயையா ?
காலம் மாயை என்றால்
ஒளியும் மாயையா ?
காலக் குதிரை
முதுகில் சுமக்கும்
இம்மூன்றும்
நிஜமா ?  நிழலா ? கானல் நீரா ?

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “காலத்தின் கோலம்

  1. தத்துவப்பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும், உங்கள் கவிதையும் அந்த வரிசையில் ஒன்றாக சிந்திக்க வைக்கிறது. எனக்குப் பிடித்த தத்துவப்பாடல்கள் பட்டியலில் சேர்த்துக் கொண்டேன். மிக்க நன்றி ஜெயபாரதன் ஐயா.

Leave a Reply

Your email address will not be published.