சிதைவின் குறியீடு
பத்மநாபபுரம் அரவிந்தன் –
ஒப்பிடல் என்பதே
மனச் சிதையின் குறியீடு
அவன் போல் இவனில்லை
இவன் போல் அவனில்லை
எவன் போலும் நானில்லை
இந்நிலை முற்றிய
மறுகலின் வெளிப்பாடாய்
குழந்தைகள் மேல் கவியும்
அவன் போல் நீயில்லை என நீ
குழந்தைகளைச் சாடுகையில்
அவற்றின் அடிமனம் சொல்லும்
எவன் போலும் நீயில்லை
எனும் உண்மையை…
ஒருநாள் நீ
உன் போல் நீயின்றி மாறி
எல்லோர் போலும் போய் சேர்வாய்…
படத்திற்கு நன்றி :
http://arefactsoursolid.wordpress.com/2014/03/03/10-hilarious-things-kids-say/