புதிய தலைமுறையின் புதிய நிகழ்ச்சி!
செல்வரகு
சினிமா 360 டிகிரி
(சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு)
செய்தி தொலைக்காட்சியான புதியதலைமுறையில் வாரம்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி “சினிமா 360டிகிரி” சனிக்கிழமைகளில் இந்திய சினிமாவில் தமிழ் சினிமாவின் பங்கு,முக்கியமான திரைப்படங்கள்,திரையுலக பிரச்சினைகள்,சாதனைகள்,சந்திக்கும் சோதனைகள் என பலதரப்பட்ட கோணங்களில் அலசி ஆராயும் தொகுப்புகள் ஒளிபரப்பாகிறது.
ஞாயிற்றுக்கிழமைகளில் முன்னணி நட்ச்சத்திரங்கள் மற்றும் சாதிக்க காத்திருக்கும் புதுவரவுகள் நடிக்கும் புத்தம் புதிய படங்களின் கலைஞர்கள்,தொழில்நுட்பக்கலைஞர்கள் பங்குபெறும் சிறப்பு நேர்க்காணல் இடம்பெறும்.தமிழ்த்திரை உலகின் முன்னணி நட்ச்சத்திரங்கள் மட்டுமின்றி,பாலிவுட் பிரபலங்களான ரண்பீர் கபூர்,ஜான் ஆப்ரஹாம்,ஸ்ரீதேவி உள்ளிட்டோரும் பங்கு பெற்றுள்ள இந்த நிகழ்ச்சியினை பாலாஜி தொகுத்து வழங்குகிறார்.